என்.ஐ. பல்கலை.யில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரசாரக் கூட்டம்
By DIN | Published on : 18th July 2017 05:56 AM | அ+அ அ- |
குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக வளாகத்தில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரசாரம் மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்த கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
குமரி மாவட்ட சுகாதாரத் துறை இயக்குநர் மதுசூதனன் அறிவுறுத்தலின்பேரில், கோதநல்லூர் சுகாதாரத் துறை அலுவலர் சதீஸ் உதவியுடன் பல்கலைக்கழக வளாகத்தில் டெங்கு குறித்த விழிப்புணர்வு, கொசு ஒழிப்பு முறைகள் குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது.
கூட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மூலம் அருகிலுள்ள கிராமங்களில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து பல்கலைக்ககழக பதிவாளர் திருமால்வளவன் மற்றும் மருத்துவர்கள் பேசினார்கள்.
ஏற்பாடுகளை நாட்டுநலப் பணித் திட்ட அலுவலர் முருகன் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் ராமதாஸ் ஆகியோர் செய்திருந்தனர். முன்னதாக டெங்கு விழிப்புணர்வு பிரசார ஊர்வலத்தை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர். பெருமாள்சாமி தொடங்கிவைத்தார்.