அணையை திறக்க வலியுறுத்தி கருகிய நெல் பயிர்களுடன் விவசாயிகள் மனு

குமரி மாவட்டத்தில் விவசாயத் தேவைக்காக அணைகளைத் திறக்க வலியுறுத்தி, கருகிய நெல் பயிர்களுடன் விவசாயிகள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

குமரி மாவட்டத்தில் விவசாயத் தேவைக்காக அணைகளைத் திறக்க வலியுறுத்தி, கருகிய நெல் பயிர்களுடன் விவசாயிகள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழாண்டு தென்மேற்கு பருவ மழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து நீர் மட்டம் உயரவில்லை.  குமரி மாவட்ட விவசாயத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பேச்சிப்பாறை அணை இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் கன்னிப்பூ சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாதுரை, செயலர் பிரசாத் மற்றும் திரளான விவசாயிகள் திங்கள்கிழமை கருகிய நெல்பயிர்களுடன் வந்து ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
அதில், பேச்சிப்பாறை அணை திறக்கப்பட்டால் அகஸ்தீசுவரம் வட்டம், பறக்கை பகுதியில் உள்ள 3 பெரிய குளங்களில் நீர் நிரம்பும். அதனை நம்பி சுமார் 1,400 ஏக்கர் நிலங்களில் சாகுபடி நடைபெறும். ஆனால் நிகழாண்டு இதுவரை அணை திறக்கப்படவில்லை.
இதனை நம்பி நாங்கள் சாகுபடி செய்த நிலங்களில் நாற்று பாவப்பட்டு பயிர்கள் வளரத்தொடங்கியுள்ளன. இந்த நேரத்தில் தண்ணீர் இல்லாவிட்டால் பயிர்கள் அனைத்தும் கருகி நாசமாகி விடும். எனவே பேச்சிப்பாறை அணையை  உடனே திறந்து கருகும் பயிர்களை காப்பாற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com