பேச்சிப்பாறை அணையை உடனே திறக்க வலியுறுத்தல்

பேச்சிப்பாறை அணையை உடனே திறக்க வேண்டுமென்று தமிழ் நாடு விவசாயிகள் சங்க குமரி மாவட்ட மாநாட்டு வலியுறுத்தியுள்ளது.

பேச்சிப்பாறை அணையை உடனே திறக்க வேண்டுமென்று தமிழ் நாடு விவசாயிகள் சங்க குமரி மாவட்ட மாநாட்டு வலியுறுத்தியுள்ளது.
இச்சங்கத்தின் குமரி மாவட்ட  16 ஆவது மாநாடு  கடையாலுமூட்டில் சனிக்கிழமை தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெற்றது.
இதில் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை களியல் சந்திப்பிலிருந்து விவசாயிகளின் பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான விவசாயத் தொழிலாளர்கள் பங்கேற்றனர். பின்னர் பொதுமாநாடு நடைபெற்றது.  மாவட்டத் தலைவர்  சைமன் சைலஸ் தலைமை வகித்தார். மாநாடு வரவேற்புக் குழுச் செயலர் எஸ்.ஆர். சேகர் வரவேற்றார்.
அகில இந்திய  விவசாயிகள் சங்க துணைத் தலைவர்  கே. வரதராஜன், மாநில பொதுச் செயலர் பி. சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் என். முருகேசன், முன்னாள் எம்.பி. பெல்லார்மின், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் செல்லசுவாமி, எஸ்.விஜி, ஆர். ரெவி, கே. ஆறுமுகம் பிள்ளை உள்ளிட்டோர் பேசினர். மாநாடு வரவேற்புக் குழு தலைவர் பி. நடராஜன் நன்றி கூறினார்.
மாநாட்டில்  பேச்சிப்பாறை அணையை உடனே திறந்து பாசனத்திற்கு தண்ணீர் விட வேண்டும். வன விலங்குகளால் பயிர்சேதம் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் வன விலங்குகளை காட்டுகள் கட்டுப்படுத்த வேண்டும்.
மாவட்டத்தில் அணைகள், கால்வாய்களை தூர் வார வேண்டும். ரப்பர் விலையை உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதுடன், ரப்பர் மறுநடவிற்கு நிறுத்தப்பட்ட மானியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக ஆர். செல்லசுவாமி, செயலராக ஆர். ரவி, பொருளராக ஜே. சதீஷ், துணைத் தலைவர்களாக சைமன் சைலஸ், ஆறுமுகம் பிள்ளை, மாதவன், துணைச் செயலர்களாக எஸ்.ஆர். சேகர், விஜி, சிவகோபன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com