தூத்தூரில் நூல் வெளியீட்டு விழா

தூத்தூரில் பத்தாம் வகுப்பு மாணவி எழுதிய கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

தூத்தூரில் பத்தாம் வகுப்பு மாணவி எழுதிய கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
 தூத்தூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் மீனவர் ராபின் மகள் ஸ்டினு (14). இவர் அப் பகுதியில் உள்ள புனித அந்தோணியார் மெட்ரிக் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் எழுதிய உன்னை தொலைக்காதே என்ற கவிதை  நூலின் வெளியீட்டு விழா தூத்தூர் நேதாஜி படிப்பகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு படிப்பகத் தலைவர் மெர்லின் மன்றோ தலைமை வகித்தார்.  செயலர் பைஜு, பொருளாளர் ஜெகதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து எழுத்தாளர் திருப்பூர் அனிதா கே. கிருஷ்ணமூர்த்தி, பள்ளி முதல்வர் தங்கம்மா வில்லியம், தமிழக கூடைப்பந்து அணியின் முன்னாள் வீரர் அருள்சினேகம், தூத்தூர் துணை பங்குத் தந்தை ஆரோக்கியதாஸ் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
பின்னர், நூலை எழுத்தாளர் அனிதா கே. கிருஷ்ணமூர்த்தி வெளியிட தங்கம்மா வில்லியம் பெற்றுக் கொண்டார். நூலாசிரியரான மாணவி ஸ்டினு ஏற்புரையாற்றினார். விழாவில் படிப்பக நிர்வாகிகள் இக்னேஷியஸ் லயோலா,  பிளாபியோ, ஜோசப் சேவியர் மற்றும் மாணவியின் பெற்றோர், உறவினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com