குமரி மாவட்ட நெடுஞ்சாலைப் பகுதிகளில் புதிய மரக்கன்றுகள் நட கோரிக்கை

குமரி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை பணிக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு மாற்றாக புதிய மரக்கன்றுகளை நட வேண்டுமென்று மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.

குமரி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை பணிக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு மாற்றாக புதிய மரக்கன்றுகளை நட வேண்டுமென்று மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மதிமுக குமரி மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் டி. சுரேஷ்குமார்,  நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை பணிக்காக 2006ஆம் ஆண்டு முதல் 2017 வரை 1,674 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ. 22 லட்சம் அரசுக்கு  வருவாய் வந்துள்ளது. இந்த விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் மதிமுக பெற்றுள்ளது.
நாட்டில் ஒரு மரம் வெட்டப்பட்டால், அதற்குப் பதிலாக 10 மரக்கன்றுகளை நட வேண்டுமென்று உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில் வலியுறுத்தியுள்ளது. குமரி மாவட்டத்தில் வெட்டப்பட்ட மரங்களுக்கு மாற்றாக இதுவரை 600 மரக்கன்றுகள் மட்டுமே நடப்பட்டுள்ளன. எனவே மீதமுள்ள 16 ஆயிரத்துக்கும் அதிகமான மரக் கன்றுகளை உடனே நெடுஞ்சாலைத் துறையினர் சாலையோரங்களில் நட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com