கலப்பட பால் விவகாரம்: அமைச்சர் பதவி விலக வேண்டும்

கலப்பட பால் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றார் மத்திய  இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

கலப்பட பால் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றார் மத்திய  இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் புதன்கிழமை கூறியது:  நீட் தேர்வில் முதல் 25 இடங்களில் ஒன்றைக் கூட தமிழ்நாட்டு மாணவர்கள் பெறாததற்கு ஆட்சியாளர்களே காரணம்.  அரசுப் பள்ளிகளில் பணியாற்றும்  ஆசிரியர்கள் திறன் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும்.  பட்டப்படிப்பு முடித்து வேலையில்லாமல் இருப்பவர்களை தாற்காலிக ஆசிரியர்களாக நியமிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
ஊராட்சி உறுப்பினர்கள் முதல்  மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் மட்டுமன்றி அரசு  ஊதியம் பெறுபவர்கள் யாராகஇருந்தாலும் அவர்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில்தான் சேர்க்க வேண்டும். இதன் மூலம் அடுத்த 3 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்தலாம். இதே போல், அரசு மருத்துவமனைகளின் தரத்தையும் உயர்த்த வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் அரசு மருத்துவமனைகளில்தான் சிகிச்சை பெற  வேண்டும் என்று அரசு உத்தரவிட வேண்டும்.
பால் பவுடரில் கலப்படம்  உள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகிறார். கலப்படம் செய்தவர்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  இதற்கு துணிச்சல் இல்லையென்றால், அவர் தனது பதவியை  ராஜிநாமா செய்ய வேண்டும்.  கலப்பட பாலை ஒரு போதும் அனுமதிக்க கூடாது. தமிழ்நாட்டுக்குள் தயாரிக்கப்படும் பாலாக இருந்தால் மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ளலாம்; வேறு மாநிலம் எனில், மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டுவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.  அமைச்சர் தனக்கு மிரட்டல் வருவதாகவும் உயிருக்கு பாதுகாப்பு இல்லையென்றும் கூறுவதை வைத்தே மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமையை புரிந்து கொள்ளலாம்.
பான்மசாலா, குட்கா  விவகாரதத்தில் லஞ்சம் வாங்கியவர்கள் மீது முழுமையாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ருத்ராட்சம் அணிந்த பூனை போல் திமுக உள்ளது  என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com