ஜி.எஸ்.டி.க்கு எதிராக தொடர் போராட்டம்: த.வெள்ளையன்

ஜி.எஸ்.டி.  விதிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடைபெறும் என்றார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன்.

ஜி.எஸ்.டி.  விதிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடைபெறும் என்றார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன்.
கன்னியாகுமரியில் புதன்கிழமை நடைபெற்ற அந்த அமைப்பின் மாவட்ட கிளை பொதுக் குழுக் கூட்டத்தில் அவ ர் கூறியது:
இந்தியாவில் ஜி.எஸ்..டி வரி விதிப்பு சட்டத்தின் மூலம் வெளிநாட்டின் சட்டத்தை கடைப்பிடிக்கும் நிர்பந்தத்துக்கு மத்திய அரசு ஆளாகியுள்ளது. இந்த வரி விதிப்பால் நாடு முழுவதும் சில்லரை வர்த்தகம் அழிந்து, ஆன்லைன் வர்த்தகம் வளரும் சூழ்நிலை உருவாகும்.
இதனால் உள்நாட்டு வணிகர்கள் தொழில் அடியோடு அழிந்து விடும். வியாபாரிகள், விவசாயிகளின் வாழ்வாதாரம் பறிக்கப்படும். இதனை முளையிலே கிள்ளியெறியாவிட்டால் மிகப்பெரிய ஆபத்தை சந்திக்கக்கூடும். இந்தச் சட்டம் முழுமையாக விலக்கப்படும் வரை வணிகர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட வேண்டும்.
 இந்தியா முழுவதும் வெள்ளிக்கிழமை (ஜூன்.30) கடையடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்திலும் வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கடையடைப்புப் போராட்டம் நடைபெறும். ஜூலை 1ஆம் தேதி இச்சட்டத்துக்கு எதிராக கடைகளில் கருப்புக்கொடி ஏற்றி கருப்பு தினமாக கடைப்பிடிக்கப்படும். நாட்டின் அனைத்து துறைகளும் வீழ்ச்சியை நோக்கி சென்றுவரும் இந்நேரத்தில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு மேலும் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்றார் அவர்.
கூட்டத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை துணைத் தலைவர் கருங்கல் ஜார்ஜ், குமரி மாவட்டத் தலைவர் டேவிட்சன், துணைத் தலைவர் அம்பலவாணன், அஞ்சுகிராமம் தலைவர் வி.ஆதிநாதசுந்தரம், கன்னியாகுமரி தலைவர் ஜாண்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மயிலாடி தலைவர் சிதம்பரநாதன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com