அரசுப் பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் முதலிடம்
By DIN | Published on : 20th May 2017 06:17 AM | அ+அ அ- |
எஸ்எஸ்எல்சி தேர்வில் தமிழக அளவில் அரசுப் பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தில் கன்னியாகுமரி மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. குமரியில் 81 அரசுப் பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வை 131 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 5113 மாணவர், மாணவிகள் எழுதினர். இதில் 5000 பேர் தேர்ச்சி பெற்றனர். குமரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விழுக்காடு 97.79 ஆகும். குமரி மாவட்டத்தில் 81 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றன. அரசுப் பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு 97.27 சதவீதம் தேர்ச்சி பெற்றது. கடந்தஆண்டு (2016) 98.17 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தது. நிகழாண்டில் அதே 98.17 சதவீதத்தை தக்க வைத்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு மாநில அளவில் தேர்ச்சி விகிதத்தில் 6 ஆவது இடத்தில் இருந்த குமரி மாவட்டம், நிகழாண்டில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.