குமரி மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா

முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாளையொட்டி,  நாகர்கோவில் குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாளையொட்டி,  நாகர்கோவில் குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, பள்ளி வளாகத்தில்  அலங்கரித்து  வைக்கப்பட்டிருந்த நேருவின் உருவப்படத்துக்கு, பள்ளித் தாளாளர் சொக்கலிங்கம்  மாலை அணிவித்தும்,   மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்.மாணவ, மாணவிகள் நேருபோல் வேடம் அணிந்து தேசத் தலைவர்களின் சிறப்புகளை எடுத்துக் கூறினர். சிறப்பாக பங்கு பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.   மாணவர், மாணவியர் ஒருவருக்கொருவர் குழந்தைகள் தின வாழ்த்துக்களை  பரிமாறிக் கொண்டனர்.  விழா ஏற்பாடுகளை ஆசிரியைகள் கிளாடியஸ்மேரி, பாப்பா, ஆனந்தி ஆகியோர் செய்திருந்தனர்.

குலசேகரத்தில்...
ஜவாஹர்லால் நேருவின் 128 ஆவது பிறந்த தின விழாவை காங்கிரஸ் கட்சியினர் குலசேகரத்தில் செவ்வாய்க்கிழமை கொண்டாடினர்.
இதையொட்டி, குலசேகரம் காவல் ஸ்தலம் சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நேருவின் உருவப்படத்துக்கு காங்கிரஸார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் வட்டாரத் தலைவர் வழக்குரைஞர் டி. காஸ்டன் கிளிட்டஸ், நகரத் தலைவர் வழக்குரைஞர் விமல் ஷெர்லின் சிங், மாவட்டச் செயலர் மோகன்தாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஜேம்ஸ், பீருக்கண், விஜயன், ரெவி, வில்சன், ராஜன், எட்வின், பீர்முகமது, அருள்தாஸ், ஸ்டீபன், ஜேக்கப்  ஆகியோர் பங்கேற்றனர்.

களியக்காவிளை அரசுப் பள்ளியில்...
களியக்காவிளை அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, தலைமையாசிரியை எம். லிசம்மா பிலிப் தலைமை வகித்தார். பள்ளி பெற்றோர் -ஆசிரியர் கழகத் தலைவர் எஸ். மாகீன் அபுபக்கர் முன்னிலை வகித்தார். ஆசிரியர் பி. ஞானதாஸ் குழந்தைகள் தின விழா குறித்துப் பேசினார். நேருவின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.  மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், ஆசிரியைகள் எஸ்.கே. லேகா, ஏ. மகேஸ்வரி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் எம். ஷகீலா, அன்னையர் குழுத் தலைவர் எஸ். செய்யதலி பாத்திமா மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com