"குமரியில் 2543 பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடுகள்'

கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழாண்டில் 2543 பயனாளிகளுக்கு, விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்பட உள்ளது என்றார் ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழாண்டில் 2543 பயனாளிகளுக்கு, விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்பட உள்ளது என்றார் ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண்.
குமரி மாவட்டத்தில் விலையில்லா வெள்ளாடுகள் பெறும் பயனாளிகள் தேர்வு குறித்த கிராம அளவிலான ஆலோசனை குழுக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் பேசியது:
வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் ஏழை மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக, தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் பல திட்டங்களில் ஒன்றான இலவச வெள்ளாடுகள் வழங்கும் திட்டம்  2011 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, 2017- 18 ஆம் நிதியாண்டில், இத்திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் 1.50 லட்சம் பயனாளிகளுக்கு 6 லட்சம் இலவச வெள்ளாடுகள் வழங்க ரூ.198.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில், முதல்கட்டமாக ஆகஸ்ட் மாதத்தில் 308 பயனாளிகளுக்கும், அக்டோபர் மாதத்தில் 536 பயனாளிகளுக்கும், இலவச வெள்ளாடுகள் (தலா 4 வீதம்) வழங்கப்பட்டுள்ளது.  மேலும், இரண்டாம் கட்டமாக, நவம்பர் மாத குறியீடாக  405 பயனாளிகளுக்கு இலவச வெள்ளாடுகள் வழங்க குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இதில், தக்கலை மற்றும் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த சடயமங்கலம், ஆத்திவிளை மற்றும் இணையம்புத்தன்துறை  கிராமங்களை சார்ந்த 277 பயனாளிகளுக்கும், மீதமுள்ள 128இல், தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட ஞாலம் ஊராட்சியில் 70 பயனாளிகளுக்கும், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட எள்ளுவிளை ஊராட்சியில் 56 பயனாளிகளுக்குமாக மொத்தம் 126 பயனாளிகளுக்கு இலவச வெள்ளாடுகள் வழங்கப்படவுள்ளது.  
மேலும், மூன்றாம்கட்டமாக, ஜனவரி மாதத்தில் 365 பயனாளிகள், பிப்ரவரி மாதத்தில் 549 பயனாளிகள் என மொத்தம்   2,543 பயனாளிகளுக்கு இலவச வெள்ளாடுகள்  (தலா 4 வீதம்) வழங்கப்படவுள்ளது என்றார் அவர்.
இக்கூட்டத்தில், மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை)  எஸ்.ஜோசப்சந்திரன், உதவி இயக்குநர்கள்  ஆர்.சுவாமிநாதன்,  ஆர்.ரிச்சர்டுராஜ்,கால்நடை உதவி மருத்துவர்கள்,  ஊராட்சி ஒன்றிய தனி அலுவலர்கள், ஊராட்சி அளவிலான கூட்ட உறுப்பினர்கள், கிராம வறுமை ஒழிப்புச் செயலர் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com