பனச்சமூட்டில் 20 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

குமரி-கேரள எல்லைப் பகுதியான பனச்சமூட்டில் வியாபாரிகள் சங்கம் சார்பில் 20 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை கேரள மாநில டிஜிபி லோகநாத் பெஹரா செவ்வாய்க்கிழமை இயக்கி வைத்தார்.

குமரி-கேரள எல்லைப் பகுதியான பனச்சமூட்டில் வியாபாரிகள் சங்கம் சார்பில் 20 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை கேரள மாநில டிஜிபி லோகநாத் பெஹரா செவ்வாய்க்கிழமை இயக்கி வைத்தார்.
இரு மாநில எல்லையோரப் பகுதிகளிலும் தொடர் திருட்டுகள், சங்கிலி பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து, பனச்சமூடு வியாபாரிகள் சங்கம் சார்பில் "காவல் கண்கள்' என்ற பெயரில் அப்பகுதி சாலையோரம் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டன. இதை அருகாமையில் உள்ள வெள்ளறடை காவல் நிலையத்திலிருந்து கண்காணிக்கும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கண்காணிப்பு கேமராக்களை செயல்பாட்டுக்கு கொண்டுவரும் நிகழ்ச்சி, பனச்சமூடு சந்திப்பில் செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது. பனச்சமூடு வியாபாரிகள் சங்கத் தலைவர் ஷிராஸ்கான் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். செயலர் விஜயன் வரவேற்றார். கேரள மாநில டிஜிபி லோகநாத் பெஹரா, கண்காணிப்பு கேமராக்களை இயக்கி வைத்தார். விழாவில் தக்கலை ஏஎஸ்பி ஸ்ரீஅபிநவ் கலந்துகொண்டு பேசினார்.
இதில், வியாபாரிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் ராஜேந்திரன், காவல் நிலைய ஆய்வாளர்கள் அருமனை பழனிகுமார், வெள்ளறடை  அஜித்குமார், உதவி ஆய்வாளர் விஜயகுமார், வெள்ளறடை ஊராட்சித் தலைவி ஷோபா குமாரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com