ஆயுர்வேத மருத்துவ முகாமில் மக்கள் பங்கேற்க வேண்டும்: ஆட்சியர் அழைப்பு

தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் நடைபெறும் ஆயுர்வேத முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்றார் ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண்.

தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் நடைபெறும் ஆயுர்வேத முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்றார் ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண்.
கன்னியாகுமரி மாவட்ட  அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில், அரசு அலுவலர்களுக்கு ஆயுர்வேதத்தின் மூலம், வலி நிவாரண சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கிவைத்து ஆட்சியர் பேசியது:
மத்திய அரசு, இந்திய மருத்துவ முறைகளை ஊக்குவிக்கும் வகையில், கடந்த ஆண்டு முதல் தேசிய ஆயுர்வேத தினம் மற்றும் உலக யோகா தினம் ஆகியவற்றை அறிவித்தது.  இந்நாளில், சிறப்பாக இந்திய முறை மருத்துவக்கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் கொண்டாடி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.  நிகழாண்டும்  அக். 17 ஆம் தேதி   தேசிய ஆயுர்வேத தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டும், மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் சார்பில், இரண்டாவது தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு, ஆயுர்வேத மருத்துவத்தின் சிறப்புகளை பொதுமக்களிடம் எடுத்துச் செல்ல அரசு  திட்டமிட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில், ஆயுர்வேத தினத்தை சிறப்பாக கொண்டாடி, பொதுமக்களிடம் கொண்டு செல்ல, தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை வழியாக செயல்படும் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மற்றும் நாகர்கோவில், கோட்டாறு மருத்துவமனை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆயுர்வேத மருத்துவத்தின் மூலம், வலி நிவாரணம்  என்பதை அனைத்து தரப்பு மக்களிடையே கொண்டு சென்று, ஆயுர்வேத மருத்துவத்தின் மூலம், வலி நிவாரணம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அதனடிப்படையில், கடந்த 9ஆம் தேதி  மாவட்ட முதியோர் இல்லங்களில் உள்ள முதியோர்களுக்கும், 10 ஆம் தேதி   மாவட்ட ஆட்சியர் அலுவலக பணியாளர்களுக்கும்,  மருத்துவமுகாம் நடைபெற்றது.
மேலும், வெள்ளிக்கிழமை(அக்.13)  நாகர்கோவில் நகராட்சி பணியாளர்களுக்கும், சனிக்கிழமை (அக். 14) ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியில் அனைத்து பொதுமக்களுக்கும், 24  ஆம் தேதி   நாகர்கோவில், மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் வழக்குரைஞர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வலி நிவாரண மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
இம்முகாமில், அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்றார் அவர்.
இந்நிகழ்ச்சியில், அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர்  கிளாரன்ஸ் டேவி,  ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (பொது)  பரிதாபானு,  செல்வகுமார் (கணக்கு), உதவி ஆணையர் (ஆயம்)  காளிமுத்து உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com