டெங்கு கொசு ஒழிப்பு சோதனை: 3 மாதங்களில் ரூ. 38,000 அபராதம் வசூல்

நாகர்கோவிலில் டெங்கு கொசு ஒழிப்பு தொடர்பாக  அதிகாரிகள் கடந்த மூன்றரை மாதங்களில் மேற்கொண்ட சோதனையில் நூற்றுக்கும் மேற்பட்ட

நாகர்கோவிலில் டெங்கு கொசு ஒழிப்பு தொடர்பாக  அதிகாரிகள் கடந்த மூன்றரை மாதங்களில் மேற்கொண்ட சோதனையில் நூற்றுக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களிடம் ரூ. 38 ஆயிரம் அபராதம்  வசூலிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  மேலும் டெங்கு கொசுப் புழு உற்பத்தியாகும் வகையில் இடங்களை சுகாதாரக் கேடாக வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு அபராதம் விதிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாகர்கோவில் நகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவின்பேரில் நகர் நல அலுவலர் வினோத்ராஜா மேற்பார்வையில் சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் நாகர்கோவில் மீனாட்சிபுரம், வடசேரி, கணேசபுரம், வடிவீஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.
கடந்த மூன்றரை மாதங்களாக ஜவுளி நிறுவனங்கள், பழைய இரும்புக்கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் கோட்டாறு குறுந்தெருவில் உள்ள ஒரு உணவகத்தில் குடிநீர்த் தொட்டியில் டெங்கு கொசு உற்பத்தியாவது கண்டுபிடிக்கப்பட்டு, அந்த உணவக உரிமையாளர், கணேசபுரத்தில் உள்ள ஒரு பழைய இரும்புக்கடை உரிமையாளர் ஆகியோருக்கு தலா ரூ. 1000 அபராதம் விதிக்கப்பட்டது.
இது குறித்து நகர் நல அலுவலர் கூறியது: நாகர்கோவில் நகரில் டெங்கு கொசுப் புழு உற்பத்தியைத் தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பிலும், சோதனையிலும் கடந்த 3 மாதங்களாக  ஈடுபட்டுள்ளனர். இதுவரை நூற்றுக்கணக்கான இடங்களில் சுகாதாரக் கேடு கண்டுபிடிக்கப்பட்டு ரூ. 38 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com