அக். 17 இல் மாவட்ட மின்னொளி வாலிபால் போட்டி

சேனம்விளையில் மாவட்ட அளவிலான மின்னொளி வாலிபால் போட்டிகள் செவ்வாய்க்கிழமை (அக். 17)தொடங்குகிறது.

சேனம்விளையில் மாவட்ட அளவிலான மின்னொளி வாலிபால் போட்டிகள் செவ்வாய்க்கிழமை (அக். 17)தொடங்குகிறது.
சேனம்விளை ஒய்.எம்.சி.ஏ. சார்பில் மாவட்ட அளவிலான மின்னொளி வாலிபால் போட்டிகள் அக். 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. 2 ஆவது பரிசாக ரூ.7 ஆயிரமும், 3 ஆவது பரிசாக ரூ.5 ஆயிரமும், 4 ஆவது பரிசாக ரூ.3 ஆயிரமும் வழங்கப்படுகிறது. போட்டிகளை குளச்சல் உதவிக் காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி தொடங்கிவைக்கிறார். போட்டிக்கான ஏற்பாடுகளை சேனம்விளை ஒய்.எம்.சி.ஏ. தலைவர் அருள்பிரகாஷ், செயலர் ஜான்பீட்டர் மற்றும் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com