திருவட்டாறு எக்செல் பள்ளியில் திறன் வளர்த்தல் கருத்தரங்கம்

திருவட்டாறு எக்செல் பள்ளியில் மாணவர்களுக்கான திறன் வளர்த்தல் மற்றும் உலக அளவிலான நிகழ்வுகளைத் தெரிந்தும் கொள்ளும் கருத்தரங்கம் 3 நாள்கள் நடைபெற்றது.

திருவட்டாறு எக்செல் பள்ளியில் மாணவர்களுக்கான திறன் வளர்த்தல் மற்றும் உலக அளவிலான நிகழ்வுகளைத் தெரிந்தும் கொள்ளும் கருத்தரங்கம் 3 நாள்கள் நடைபெற்றது.
இந்தியா இன்டர் நேஷனல் மாடல் யுனைடட் நேஷன்ஸ் (ஐ.ஐ.எம்.யூ.என்.) என்ற அமைப்பு சார்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், திருவட்டாறு எக்செல் சென்ட்ரல் பள்ளி உள்பட தமிழகம் மற்றும் கேரளத்திலிருந்து 11 பள்ளிகளைச் சேர்ந்த 350 மாணவர்,  மாணவிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியை பத்மநாபபுரம் எம்.எல்.ஏ. மனோதங்கராஜ் தொடங்கிவைத்தார். எக்செல் பள்ளிக் குழுமங்களின் தலைவர் ஸ்ரீகுமார் தலைமை வகித்தார். இயக்குநர் பிருந்தா ஸ்ரீகுமார் குத்துவிளக்கேற்றினார். ஐஐஎம்யூஎன் அமைப்பின் பொது இயக்குநர் மன்னின் பரிக், துணைத் தலைவர் அமன் பால்டியா,  செயலர் அருஷி சிங்கி, பேராசிரியர் துலிப் டானியல்ஸ் ஆகியோர் பேசினர்.  நிறைவு நாள் நிகழ்ச்சியில் தக்கலை ஏஎஸ்பி ஸ்ரீஅபினவ் பங்கேற்று பேசினார்.
கருத்தரங்கில் சிறப்பான பங்களிப்பிற்காக மதுரை டிவிஎஸ் லெட்சுமி பள்ளிக்கு கோப்பை வழங்கப்பட்டது. எக்செல் பள்ளிக் குழுமத் தலைவர் ஸ்ரீகுமாருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் சாம் டானியல் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com