நாளை பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு: குமரி மாவட்டத்தில் 20 மையங்களில் ஏற்பாடு

குமரி மாவட்டத்தில் சனிக்கிழமை (செப்.16) நடைபெறும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான தேர்வில் 7578 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதுகின்றனர்.

குமரி மாவட்டத்தில் சனிக்கிழமை (செப்.16) நடைபெறும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான தேர்வில் 7578 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதுகின்றனர்.
அரசு பல்தொழில்ட்பக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்களுக்கான நேரடி நியமன எழுத்துத் தேர்வுகள் நடைபெறுவது குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் ரா.சவாண் பேசியது:
அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்களுக்கான நேரடி நியமன போட்டி எழுத்துத் தேர்வு 16 ஆம் தேதி நடைபெறவுள்ளது. குமரி மாவட்டத்தில் இத்தேர்வானது, 20 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. 7,578 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளார்கள். இத்தேர்வை கண்காணிக்க, மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக குழு அமைக்கப்பட்டு, 20 தேர்வு மையங்களுக்கும், தேர்வுப் பணியாளர்கள், பறக்கும் படை அலுவலர்கள், காவல்துறை ஆண் மற்றும் பெண் காவலர்கள் தேவையான அளவு நியமனம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், தேர்வர்கள் தேர்வெழுத வரும்போது, நுழைவுச்சீட்டு மற்றும் எழுதுபொருள், பேனா ஆகியவை மட்டும் தேர்வறைக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர். தேர்வு நடைபெறும் மையத்துக்கு காலை 8.30 மணிக்குள் வருகை தர வேண்டும்.
பின்னர், தேர்வர்கள் பரிசோதனை செய்யப்பட்டு, 9.30 மணிக்கு தேர்வறைக்குள் அனுமதிக்கப்படுவர். தேர்வு முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.
தேர்வறைக்குள் செல்லிடப்பேசி, எலக்ட்ரானிக் கைக்கடிகாரங்கள், நினைவகம் பொதிந்த கை வளையல்கள், கணிப்பான் உள்ளிட்ட அனைத்து வகையான மின்னனு சாதனங்கள், கிளார்க் அட்டவணை போன்றவை அனுமதிக்கப்படாது. தேர்வர்கள் தங்களுக்குரிய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொண்டுவர வேண்டும். தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தின் மூலமாக தனியாக அனுப்பப் படாது என்றார்.
கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எஸ். பாலா, மாவட்ட கல்வி அலுவலர்கள் (நாகர்கோவில்) ஆறுமுகம், லெட்சுமண சுவாமி (குழித்துறை ) உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com