குமரியில் அண்ணா பிறந்தநாள் விழா

கன்னியாகுமரியில் மறைந்த முதல்வர் சி.என்.அண்ணாத்துரையின் 109-ஆவது பிறந்த நாள் விழா திமுகவினரால் கொண்டாடப்பட்டது.

கன்னியாகுமரியில் மறைந்த முதல்வர் சி.என்.அண்ணாத்துரையின் 109-ஆவது பிறந்த நாள் விழா திமுகவினரால் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, கன்னியாகுமரி பழைய பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள அண்ணா சிலைக்கு எஸ்.ஆஸ்டின் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதில், ஒன்றிய திமுக செயலர்கள் என்.தாமரைபாரதி, எம்.மதியழகன், திமுக நிர்வாகிகள் கே.முத்துசுவாமி, குமரி ஸ்டீபன், ஜே.ஜே.ஆர்.ஜஸ்டின், பி.பாபு, த.இளங்கோ, எஸ்.வைகுண்டபெருமாள், எஸ்.சாய்ராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தக்கலை: குமரி மேற்கு மாவட்ட திமுகவினர் தக்கலையில் மாவட்டச் செயலர் பத்தமநாபபுரம் எம்எல்ஏ மனோதங்கராஜ் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கு.லாரன்ஸ், வழக்குரைஞர் தினேஷ், மாவட்ட துணைச் செயலர் ஜாண்கிறிஸ்டோபர், பொதுக்குழு உறுப்பினர் கிறிஸ்டல் பிரேமகுமாரி, தக்கலை வடக்கு ஒன்றியச் செயலர் அருளானந்தஜார்ஜ், நிர்வாகிகள் ரேவன்கில், வர்க்கீஸ், மரிய சிசுகுமார், ஜார்ஜ், குமாரசுவாமி, வழக்குரைஞர் முத்துகுமரேஷ், மில்டன், ஜாண், இப்ராஹிம்கான், குமார், ஜலால், செல்வின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com