குமரியில் மழை தணிந்தது பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 42 அடி

குமரி மாவட்டத்தில் 3 நாள்கள் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை மழையின்றி வறண்ட வானிலை நிலவியது.

குமரி மாவட்டத்தில் 3 நாள்கள் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை மழையின்றி வறண்ட வானிலை நிலவியது.
மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக சாரல் மற்றும் கன மழை பெய்த நிலையில் வெள்ளிக்கிழமை பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் மிதமான வெயிலும் வறண்ட வானிலையே நிலவியது. இதனால் அணைகளில் உள்வரத்து நீரின் அளவு சற்று குறைந்திருந்தது. பேச்சிப்பாறை அணையில் வியாழக்கிழமை உள்வரத்து விநாடிக்கு 1552 கன அடி இருந்த நிலையில் வெள்ளிக்கிழமை உள்வரத்து 870 கன அடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் 17.50 அடியாக இருந்தது.
இது போன்று பெருஞ்சாணி அணையில் வியாழக்கிழமை உள்வரத்து 1133 கன அடியாக இருந்த நிலையில் வெள்ளிக்கிழமை இந்த அளவு 920 கன அடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் 42 அடியாக இருந்தது. சிற்றாறு அணைகளில் உயராத நீர்மட்டம்: தொடர் மழையின் காரணமாக பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் அதிகரித்த போதிலும் சிற்றாறு அணைகளின் நீர்மட்டம் போதிய அளவில் உயராமலேயே உள்ளது.
மழைக்கு முன்னர் 1.75 அடி என்ற அளவில் இருந்த இந்த அணைகளின் நீர்மட்டம் தற்போது 3.20 அடி என்ற அளவிலேயே உயர்ந்துள்ளது. இது போன்று பொய்கை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து மைனஸ் அளவில் உள்ளது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டமும் குறிப்பிடத்தகுந்த அளவில் உயரவில்லை. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் மைனஸ் அளவிலிருந்து பிளஸ் 1 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com