நாகர்கோவிலில் கண்தான விழிப்புணர்வுப் பேரணி

தேசிய கண்தான வாரவிழாவை முன்னிட்டு, நாகர்கோவிலில் கல்லூரி மாணவர், மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணியை ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் வெள்ளிக்கிழமை கொடியசைத்து,

தேசிய கண்தான வாரவிழாவை முன்னிட்டு, நாகர்கோவிலில் கல்லூரி மாணவர், மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணியை ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் வெள்ளிக்கிழமை கொடியசைத்து, தொடங்கி வைத்தார்.
நாகர்கோவில், பெஜான்சிங் கண் மருத்துவமனை, நாகர்கோவில் கண் வங்கி, சார்பில், 32 ஆவது தேசிய கண்தான வாரவிழாவை முன்னிட்டு, கல்லூரி மாணவர், மாணவிகள் பங்கேற்ற கண் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இப்பேரணியை, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து, பேரணியில் கலந்து கொண்டார்.
இப்பேரணியில், பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி மற்றும் நாகர்கோவில் ஸ்காட் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளிலிருந்து சுமார் 500 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர், மாணவிகள் கண்தானம் குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில், விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தொடங்கிய இப்பேரணி, பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி, மணிமேடை சந்திப்பு, நீதிமன்ற சாலை, டதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி சந்திப்பு வழியாக ரோட்டரி சமூக நலக்கூடத்தில் நிறைவடைந்தது.
இந்நிகழ்ச்சியில், மருத்துவர்கள் பெஜான்சிங், ரூஷிதா பெஜான்சிங், பிரயான் சக்கரவர்த்தி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரி மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com