பரக்காணி ஆற்றில் தடுப்பணை கட்ட வலியுறுத்தி பாஜக தர்னா

கடல் நீர் ஆற்று நீரில் உள்புகுந்து, தாமிரவருணி ஆற்றங்கரையோர குடிநீர் திட்டங்கள் அனைத்தும் உப்பு நீராக மாறியதை

கடல் நீர் ஆற்று நீரில் உள்புகுந்து, தாமிரவருணி ஆற்றங்கரையோர குடிநீர் திட்டங்கள் அனைத்தும் உப்பு நீராக மாறியதை தடுக்கும் வகையில் பரக்காணி பகுதியில் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட மாவட்ட நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்தி பாஜக சார்பில் வெள்ளிக்கிழமை தர்னா போராட்டம் நடைபெற்றது.
காஞ்சாம்புறம் தெருவுமுக்கு சந்திப்பில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு பாஜக மாவட்ட துணைத் தலைவர் சி. செல்வராஜ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எஸ். முத்துகிருஷ்ணன் போராட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார். தொடர்ந்து மாவட்ட பொதுச் செயலர் சி.எம். சஜு, மாவட்டச் செயலர் விசு, பாஜக விவசாய அணி மாநில துணைத் தலைவர் ரவீந்திரன், விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினர் சசிகுமார், கோட்ட பொறுப்பாளர் சி. தர்மராஜ் உள்ளிட்டோர் பேசினர். மாநில துணைத் தலைவர் எம்.ஆர். காந்தி போராட்டத்தை நிறைவு செய்து பேசினார்.
இதில் முன்சிறை கிராம மண்டலத் தலைவர் பிரேம்குமார், கட்சி நிர்வாகிகள் மணிசாமி, தங்கப்பன், சவார்க்கர், ஏழுதேசம் மண்டல செயலர் வித்தியாவதி, ஓமனா, திலகவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏழுதேசம் மண்டலத் தலைவர் என். ராஜகுமார் வரவேற்றார். மண்டல பொதுச் செயலர் என். பிரணேஷ்குமார் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com