அஞ்சுகிராமம் பகுதி குளங்களுக்கு தண்ணீர் திறப்பதில் அலட்சியம்: எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள கடைவரம்பு குளங்களுக்கு தண்ணீர் திறந்து விடுவதில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் அலட்சியம் செய்வதாக எஸ்.ஆஸ்டின் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார்.

அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள கடைவரம்பு குளங்களுக்கு தண்ணீர் திறந்து விடுவதில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் அலட்சியம் செய்வதாக எஸ்.ஆஸ்டின் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்: கன்னியாகுமரி தொகுதிகுள்பட்ட பொதுமக்களுக்கு குடிநீர் ஆதாரம் உள்ள குளங்களுக்கு என்.பி. சானல் மூலம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் ஆகியோரை நேரில் சந்தித்து வலியுறுத்தியதன் அடிப்படையில் பேச்சிப்பாறை அணை திறக்கப்பட்டு தற்போது என்.பி. சானல் மூலமாக கொட்டாரம், மகாராஜபுரம், தென்தாமரைகுளம், கரும்பாட்டூர், சாமிதோப்பு ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
ஆனால் அஞ்சுகிராமம், கன்னியாகுமரி, அழகப்பபுரம் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் பிராந்தநேரி குளம், புதுக்குளம், வாலசவுந்தரிகுளம், பிள்ளையார்குளம், வட்டகோட்டை குளம், செங்குளம், மேலக்கருங்குளம், பாட்டுகுளம், ஐயன்குளம், குமரிசால்குளம், நாச்சியார்குளம் ஆகிய குளங்களுக்கு இதுவரை தண்ணீர் சென்றடையவில்லை. இதனால் இந்தப் பகுதியில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சானலில் 15 நாள்களுக்கு குறையாமல் தண்ணீர் திறந்து விட்டால்தான் குளங்களுக்கு சென்றடையும். எனவே இதுவரை தண்ணீர் கொண்டு செல்லாததைக் கண்டித்து செப். 18-ஆம் தேதி அஞ்சுகிராமம் சந்திப்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும். மேலும் தண்ணீர் திறந்துவிட காலதாமதப்படுத்தினால் பொதுப்பணித் துறை அலுவலகம் முன்பு அடுத்த கட்டப் போராட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com