அனைத்து காணி குடியிருப்புகளுக்கும் வீட்டு வரி வசூல் செய்யக் கோரி மனு

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காணி குடியிருப்புக்களுக்கும் வீட்டு வரி வசூல் செய்ய வேண்டும் என்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காணி குடியிருப்புக்களுக்கும் வீட்டு வரி வசூல் செய்ய வேண்டும் என்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
மாவட்ட பாஜக எஸ்.டி அணித் தலைவர் புஷ்பாகரன் காணி தலைமையில் ஆட்சியர் அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்தவர்கள் அளித்த மனு: கன்னியாகுமரி மாவட்டம், வனப் பகுதியில் உள்ள கோருவக்குளிமலை காணிக் குடியிருப்பு பகுதியில் பழங்காலத்திலிருந்தே குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறோம். எங்கள் வீடுகளுக்கு உள்ளாட்சித் துறை மூலம் வீட்டு வரி வசூல் செய்யப்படவில்லை. அரசு அலுவலகங்களில் வருமானச் சான்று, ஜாதிச் சான்று, இருப்பிடச் சான்று, மின் இணைப்பு வேண்டி விண்ணப்பிக்கும் போது வீட்டு வரி ரசீது தேவைப்படுகிறது.
சமூக நலத்துறை மூலம் பட்டா வழங்குவதற்கும், வீட்டு வரி ரசீது அதிகாரிகளால் கோரப்படுகிறது. பேச்சிப்பாறை ஊராட்சியில் உள்ள காணிக்குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு ஏற்கெனவே வீட்டு வரி வசூல் செய்யப்படுகிறது. இதே போல் காணிக்குடியிருப்பு பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் வீட்டு வரி வசூல் செய்து, ரசீது வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com