அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

கன்னியாகுமரியை அடுத்த ஏ.வி.கே.நகர் அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில் கைவினைப் பொருள்களின் மதிப்பைக் கூட்டுவதில் தொழில் நுட்பத்தின் பங்கு என்ற தலைப்பில் கலந்தாய்வு

கன்னியாகுமரியை அடுத்த ஏ.வி.கே.நகர் அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில் கைவினைப் பொருள்களின் மதிப்பைக் கூட்டுவதில் தொழில் நுட்பத்தின் பங்கு என்ற தலைப்பில் கலந்தாய்வு மற்றும் கண்காட்சி நடைபெற்றது.
மத்திய கைவினைப் பொருள்கள் உதவி இயக்குநர் எல்.பாலு தலைமை வகித்தார். கன்னியாகுமரி அரசு அருங்காட்சிய காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி பேசினார். கைவினைக் கலைஞர்களுக்கான அரசின் அடையாள அட்டைகளை அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி முதல்வர் ப.செந்தில்குமார், துணை முதல்வர் வளனரசு ஆகியோர் வழங்கினர். குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கைவினைக் கலைஞர்கள் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடினர். தொடர்ந்து கைவினைப் பொருள்கள் கண்காட்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களான ஜி.காஸ்வின் காஸ்ட்ரோ, ஜெ.பியேர்ள்ஸன் டேவிட் ஆகியோர் கலைஞர்களுக்கு கைவினைப் பொருள்கள் தயாரிப்பதில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண்பதில் உயர் தொழில்நுட்ப உதவிகள் குறித்துப் பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com