இணையதளம் மூலம் பத்திரப்பதிவு: பத்திர எழுத்தர்களுக்கு பயிற்சி

போலிபத்திரங்களை தவிர்க்கும் விதமாக இணையதளம் மூலம் பத்திரப்பதிவு செய்யும் திட்டம் அமலுக்கு வர இருக்கிறது. இதற்காக குமரி மாவட்டத்தில் பத்திர எழுத்தர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

போலிபத்திரங்களை தவிர்க்கும் விதமாக இணையதளம் மூலம் பத்திரப்பதிவு செய்யும் திட்டம் அமலுக்கு வர இருக்கிறது. இதற்காக குமரி மாவட்டத்தில் பத்திர எழுத்தர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழக பத்திரபதிவுத்துறை சார்பில் இணையதளம் (ஆன்லைன்) மூலம் பத்திரப்பதிவு செய்யும் திட்டத்துக்கான பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்திர எழுத்தாளர்களுக்கு ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு செய்யும் பயிற்சி, நாகர்கோவிலை அடுத்த சுங்கான்கடையில் நடைபெற்றது.
மாவட்ட பதிவாளர் பாபு அருள்ஜோசி, மார்த்தாண்டம் மாவட்ட பதிவாளர் பொன்னும் பெருமாள் ஆகியோர் இப்பயிற்சியை வழிநடத்தினர். பயிற்சி குறித்து அவர்கள் கூறியது: தமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலம் பத்திர பதிவு செய்யும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட இருக்கிறது. இதுகுறித்து பத்திர பதிவு எழுத்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயிற்சிகள் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. இப்போது நடைபெற்ற இந்த 3 ஆம் கட்ட பயிற்சியில் கொட்டாரம், கன்னியாகுமரி எல்லைக்குள்பட்ட பத்திர எழுத்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதன்மூலம் சாதாரண மக்களும் ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு செய்துகொள்ளலாம். ஆன்லைன் பட்டா பதிவின்போது ஒரிஜினல் பட்டாவை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். தாய் பத்திரம், ஐ.டி.கார்டு ஆகியவை முக்கியமாக பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்காக ரூ. 115 கோடி செலவில் தனியார் நிறுவனம் மூலம் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் முழு பயன்பாட்டுக்கு வரும் போது போலி பத்திரப்பதிவுகள் முழுவதும் தடுக்கப்படும். கருப்பு பணம் மூலம் அதிக சொத்துக்கள் வாங்கி குவிப்பதை கண்டறிய முடியும். அதுமட்டுமல்லாது ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக சொத்துப்பதிவு செய்பவர்களிடம் பான் எண் பெறப்படும். அவர்களது பணத்துக்கு சரியான கணக்கு இல்லாமல் இருந்தால் வருமான வரித்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com