குமரியில் மழையால் மண் செழிப்பு: வேகமெடுக்கும் வேளாண் பணிகள்

குமரி மாவட்டத்தில் மழையின் காரணமாக மண் செழித்துள்ளதையடுத்து வேளாண் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

குமரி மாவட்டத்தில் மழையின் காரணமாக மண் செழித்துள்ளதையடுத்து வேளாண் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
குமரி மாவட்டத்தில் மழை பெய்யாமல் கடும் வறட்சி நிலவி வந்த நிலையில் தென்னை, நெல், வாழை, ரப்பர், மரவள்ளி, பூக்கள், காய்கனிகள் என அனைத்து வகைப் பயிர்களும் காய்ந்து கருகின. இதனால் விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டது. குறிப்பாக குமரி மாவட்ட வரலாற்றில் இல்லாத வகையில் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் கருகின.
மழையில்லாத நிலையில் கும்பப்பூ பருவத்தில் 2500 ஹெக்டேரில் மட்டுமே நெல் சாகுபடி நடைபெற்றது. வறட்சியின் காரணமாக ரப்பர் மரங்களில் பால் உற்பத்தி கடுமையாகச் சரிந்தது. இதன் பாதிப்பு விசாயிகளுக்கு மட்டுமின்றி விவசாயத்தில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கும் கடும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியது.
தீவிரமடையும் நடவுப் பணிகள்: இந்நிலையில் மாவட்டத்தில் அண்மை நாள்களாக பெய்து வரும் மழை விவசாயிகளுக்கு ஆறுதலை அளித்துள்ளதுடன். மண்ணையும் செழிப்படையைச் செய்துள்ளது. மாவட்டத்தில் பல இடங்களில் ரப்பர் மறு நடவுப் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளதைக் காணமுடிகிறது. இது போன்று வறட்சியால் கருகிய தென்னை மரங்களை வெட்டி அகற்றி விட்டு புதிய தென்னங்கன்றுகள் நடும் பணிகளும் தொடங்கியுள்ளன. மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளில் மரவள்ளி நடவுகளும், அன்னாசி நடவுகளும் தீவிரமடைந்துள்ளன.
விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகள்: மழையைத் தொடர்ந்து நடவுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதால் வேலையின்றி முடங்கிக் கிடந்த விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. இது குறித்து கொட்டூர் பகுதியைச் சேர்ந்த முன்னோடி அன்னாசி விவசாயி பிரான்சீஸ் கூறியது: மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் வறட்சி ஒட்டுமொத்த விவசாய சமூகத்தையும் கடுமையாக பாதிப்படையச் செய்திருந்தது. இதனால் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது.
தற்போது மழை பெய்து வரும் நிலையில் விவசாயப் பணிகள் வேகம் எடுத்துள்ளன. மழை பெய்து மண் பதமாக மாறியுள்ளதால் அன்னாசி புது மற்றும் மறு நடவுப் பணிகளைத் தொடங்கியுள்ளோம். இது போன்று ரப்பர், மரவள்ளி, வாழை உள்ளிட்ட அனைத்து வகைப்பயிர்களின் நடவுப் பணிகளும் தொடங்கியுள்ளன. தொடர்ந்து மழை பெய்தால் நல்ல பலன் ஏற்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com