'ரப்பர் தோட்டங்களை பதிவு செய்து சான்றிதழ் பெற வேண்டும்

குமரி மாவட்டத்தில் ரப்பர் விவசாயிகள் தங்களின் சொந்த ரப்பர் தோட்டங்களை ரப்பர் வாரியத்தில் பதிவு செய்து சான்றிதழ் பெற வேண்டுமென ரப்பர் வாரியம் அறிவித்துள்ளது.

குமரி மாவட்டத்தில் ரப்பர் விவசாயிகள் தங்களின் சொந்த ரப்பர் தோட்டங்களை ரப்பர் வாரியத்தில் பதிவு செய்து சான்றிதழ் பெற வேண்டுமென ரப்பர் வாரியம் அறிவித்துள்ளது.
இது குறித்து மார்த்தாண்டம் ரப்பர் வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ரப்பர் தோட்டங்களுக்கு சான்றிதழ் பெறும் திட்டத்தினை மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ரப்பர் வாரியம் செயல்படுத்துகிறது. இத்திட்டம் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் விவசாயிகள் தங்களது சொந்த ரப்பர் தோட்டங்களை பதிவு செய்து, சான்றிதழ் பெற வேண்டும். இதில் விவசாயிகள் கட்டாயப்படுத்தப்படவில்லை. இத்திட்டத்தின் மூலம் ரப்பர் உற்பத்தி, உற்பத்தி திறன், பால் வடிக்காத மற்றும் பால் வடிப்பு ரப்பர் தோட்டங்களின் பரப்பளவு, நடவு செய்யப்பட்டுள்ள ரப்பர் இனங்கள் உள்ளிட்ட குறித்த விவரங்கள் சேகரிக்கப்படும். இதற்கான விண்ணப்பங்கள் ரப்பர் தோட்ட விவசாயிகளிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. உரிய கட்டணம் செலுத்தி விவசாயிகள் தங்களின் ரப்பர் தோட்டங்களுக்கு சான்றிதழ் பெறவேண்டும். விண்ணப்பப் படிவங்களை இணைய தளம் அல்லது ரப்பர் வாரிய அலுவலகங்களிலிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com