நாகர்கோவில் ஆதர்ஷ் பள்ளியில் ஆசிரியர்களுக்கான பயிற்சி மையம் தொடக்கம்

நாகர்கோவில் ஆதர்ஷ் வித்யாகேந்திரா பள்ளியில் ஆசிரியர்களுக்கான பயிற்சி மையம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. 

நாகர்கோவில் ஆதர்ஷ் வித்யாகேந்திரா பள்ளியில் ஆசிரியர்களுக்கான பயிற்சி மையம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. 
நிகழ்ச்சிக்கு  பள்ளி முதல்வர் வி.ஆர். பினுமோன், நிர்வாக  அதிகாரி ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆதர்ஷ் கல்வி அறக்கட்டளைத் தலைவர் டாக்டர் கோபால் சுரேந்திரன் தலைமை வகித்து பேசியதாவது: மாறிவரும் கல்விச்சூழலில் உலகத்தரத்தில் கல்வி என்பது இந்தியாவில் இன்னும் பெயரளவிலேயே இருந்து  வருகிறது. இந்திய  ஆசிரியர்கள், இந்தியக்  கல்விமுறையோடு, உலகளாவிய கல்வி முறைகளையும், கல்வியியல் புதுமைகளையும் கற்பிக்கும் முறைகளையும் அறிந்து  நிபுணத்துவம் பெற்று உலகத் தரத்தில் கல்வியை  மாணவர்களுக்குஅளிக்கும் விதமாக ஆசிரியர்களுக்கான  உலகத்தர பயிற்சி மையம் ஒன்றை ஆதர்ஷ் கல்விஅறக்கட்டளை"எஜூகேஷன் இன்ஷியேடிவ்ஸ்"என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. 
எஜூகேஷன் இன்ஷியேடிவ்ஸ் கல்வி நிறுவனத்தின் முதல் பயிற்சிப்  பட்டறை ஏப். 16 ஆம் தேதி முதல் 20ஆம் தேதி  வரைஆதர்ஷ் வித்யாகேந்திரா பள்ளிஆசிரியர்களுக்கு நடத்தப்படுகிறது. இதில்,  இங்கிலாந்தைச் சேர்ந்த டாக்டர் யாஸ்மின் பெய்லி, அமெரிக்காவைச் சேர்ந்த  டாக்டர் ஜெனிபர்ஸெல்ப், மலேசியாவைச் சேர்ந்த கிரேசியஸ் பெர்னான்டஸ், இசாரோன்கா ஆகியோர் ஆசிரியர்களுக்கு  பயிற்சியளிக்கின்றனர் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com