நாகர்கோவில் ரயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடைகள்: பயணிகள் சங்கம் வரவேற்பு

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடைகள் மற்றும் பிட்லைன்கள் அமைக்கப்படவுள்ளதற்கு ரயில் பயணிகள் சங்கம் வரவேற்றுள்ளது. 

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடைகள் மற்றும் பிட்லைன்கள் அமைக்கப்படவுள்ளதற்கு ரயில் பயணிகள் சங்கம் வரவேற்றுள்ளது. 
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவர் எஸ்.ஆர்.ஸ்ரீராம் வெளியிட்ட அறிக்கை: நாகர்கோவில் ரயில் நிலையத்தில் போதிய நடைமேடைகள் இல்லாததால்,  இங்கு வரும் ரயில்கள் சிக்னல் கிடைக்காமல் அதிக நேரம் வெளிப்பகுதியில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 
இந்நிலையில், மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் முயற்சியில்,  தற்போது ரயில்வே விரிவாக்கத் திட்டத்தின் கீழ், நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரயில்களை பராமரிப்பு செய்வதற்கு கூடுதலாக 5 பிட்லைன்களும், பராமரிப்பு செய்த காலி ரயில் பெட்டிகளை நிறுத்திவைப்பதற்கு 9 ஸ்டேபளிங் லைன்களும், 5 நடைமேடைகளும் அமைக்கப்படும் என மாஸ்டர் பிளான் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அதோடு சிக்னல் லைன் பணிமனை விரிவாக்கம், தற்போதைய பிட்லைன்களின் நீளத்தை அதிகரித்தல், ரயில்பெட்டிகள் பராமரிப்புக்கு என புதிய கட்டடங்கள் கட்டுதல், ரயில் நிலைய கழிவு நீரை மறுசுழற்சி மூலமாக சுத்திகரிக்கும் ஆலை உள்ளிட்டவையும் அமைக்கப்படுகின்றன.
மேலும், நாகர்கோவில் ரயில் நிலையம் அருகே சுமார் 30 ஏக்கரில் ரூ.40 கோடி செலவில் பேருந்து முனையம் அமைய உள்ளது. ரயில் முனைய விரிவாக்கம் செய்யும் போது, திருவனந்தபுரம் ரயில்நிலையத்தை போல் பேருந்து முனையம் ரயில் நிலையம் அருகிலேயே அமைந்துவிடும்.  
மேலும், நாகர்கோவில் ரயில் நிலைய விரிவாக்கப் பணிகள் முடிக்கப்பட்டுவிட்டால், திருவனந்தபுரம், எர்ணாகுளம், கொச்சுவேலி, சென்னை போன்ற இடங்களிலிருந்து இயக்கப்பட்டு வரும் ரயில்கள் குமரிக்கு நீட்டிப்பு செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com