சாமிதோப்பு தலைமைப்பதியில் நாளை ஆவணித் திருவிழா கொடியேற்றம்

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணித் திருவிழா வெள்ளிக்கிழமை (ஆக. 17) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணித் திருவிழா வெள்ளிக்கிழமை (ஆக. 17) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆண்டுதோறும் ஆவணி, தை, வைகாசி ஆகிய மாதங்களில் 11 நாள்கள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு ஆவணித் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
முதல் நாளில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பதமிடுதல், 4.30 மணிக்கு பணிவிடை, 5 மணிக்கு குரு அழைப்பும் நடைபெறும். காலை 6 மணிக்கு பாலபிரஜாபதி அடிகளார் தலைமை வகித்து கொடியேற்றுகிறார். இந்நிகழ்வில் தலைமைப்பதி குருக்கள் பால ஜனாதிபதி, பால லோகாதிபதி, ராஜவேல், பையன் கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். காலை 7 மணிக்கு வாகன பவனி, நண்பகல் 12 மணிக்கு அன்னதானம் நடைபெறும். மாலை 4.30 மணிக்கு பணிவிடை, இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில்  பவனி வருதலும் நடைபெறும்.
இரண்டாம் நாள் மயில் வாகனத்திலும், 3-ஆம் நாள் அன்ன வாகனத்திலும், 4-ஆம் புலி வாகனத்திலும், 5-ஆம் நாள் சப்பர வாகனத்திலும், 6-ஆம் நாள் சர்ப்ப வாகனத்திலும், 7-ஆம் நாள் கருட வாகனத்திலும் அய்யா பவனி வருதல் நடைபெறும்.
கலிவேட்டை: எட்டாம் நாளான ஆக. 24-ஆம் தேதி மாலை 4 மணிக்கு அய்யா குதிரை வாகனத்தில் எழுந்தருளி பதிவலம் வந்து மாலை 6.30 மணிக்கு முத்திரி கிணறு அருகில் குரு. பால ஜனாதிபதி தலைமையில் கலிவேட்டையாடுதல் நடைபெறும்.   11ஆம் நாளான ஆக. 27ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு அய்யா பல்லக்கு வாகனத்தில் இருந்து தேருக்கு எழுந்தருளி தேரோட்டம் நடைபெறும்.  விழாவுக்கான ஏற்பாடுகளை தலைமைப்பதி நிர்வாகிகள் பால பிரஜாதிபதி அடிகளார், பால ஜனாதிபதி, பால லோகாதிபதி, ராஜவேல், பையன் கிருஷ்ணராஜ் ஆகியோர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com