கேரளத்துக்கு 26 லாரிகளில் நிவாரணப் பொருள்கள்

கேரள மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, குமரி மாவட்டத்தில் இருந்து பொதுநல ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள்

கேரள மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, குமரி மாவட்டத்தில் இருந்து பொதுநல ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உதவிக் கரம் நீட்டுவதால், நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் நிவாரணப் பொருள்கள் குவியத் தொடங்கியுள்ளன. 
நிவாரணப் பொருள்களை தாமாக முன்வந்து வழங்குவோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நாஞ்சில் கூட்டரங்கில் வந்து அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து,  கடந்த 17ஆம் தேதி இரவு முதல், ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், தன்னார்வலர்கள் நிவாரணப் பொருள்களை வழங்கி வருகின்றனர். நிவாரணப் பொருள்களாக படுக்கை விரிப்பு,  பாய்,  தண்ணீர் பாட்டில், பிஸ்கட், காய்கனிகள், அரிசி மூட்டைகள் உள்ளிட்டவை கொண்டு வரப்பட்டன.  இப்பொருள்கள், நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 6 மணி நேரத்திற்கு ஒருமுறை லாரிகள் மூலம் கேரளத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த பொருள்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக, தனித்தனி பார்சல்களாக கட்டப்பட்டது. இப்பணியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, நாகர்கோவில் கோட்டாட்சியர் ஜானகி மற்றும் தொண்டு நிறுவன ஊழியர்கள், கல்லூரி மாணவர், மாணவிகளுடன் இணைந்து ஈடுபட்டனர்.  கடந்த 2 நாள்களாக சேகரிக்கப்பட்ட ரூ. 36.44 லட்சம் மதிப்பிலான பொருள்கள் 26 லாரிகள் மூலம் கேரள மாநிலத்துக்கு அனுப்பப்பட்டதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com