கோட்டாறில் திருக்குறள் சிந்தனை முற்றம்

குறளகம் சார்பில் நாகர்கோவில் கோட்டாறு ராசகோகிலம் அரங்கில், திருக்குறள் சிந்தனை முற்றம் நடைபெற்றது.

குறளகம் சார்பில் நாகர்கோவில் கோட்டாறு ராசகோகிலம் அரங்கில், திருக்குறள் சிந்தனை முற்றம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, விவேகானந்தா கல்லூரி முன்னாள் முதல்வர் பொன்னுலிங்கம் தலைமை வகித்தார். அறிஞர் அண்ணா கல்லூரி முன்னாள் முதல்வர்கள் பத்மநாபன், ஆபத்துகாத்தபிள்ளை ஆகியோர் முன்னிலை  வகித்தனர்.
மருந்துவாழ்மலை மனிதவள மேம்பாட்டு தியான மன்ற நிறுவனர் சுய ஸ்ரீபழனி சுவாமிகள் கலந்துகொண்டு பேசியது: 
திருக்குறளில் ஒவ்வொரு பாடலிலும் யோகா விளக்கப்படுகிறது. பிறவிப் பெருங்கடலாகிய 7 ஆதாரங்களை கடந்து பிறவாப் பெருநிலையை உயிர்கள் அடைவதற்கான வாழ்வியல் நெறிமுறைகள், குறளை ஆழ்ந்து நோக்கினால் உய்த்து உணரலாம் என்றார் அவர்.
பாரதி குறித்து மாணவி வர்ஷிணி பிரியா, குறளகம் ஒரு குருகுலம் என்ற தலைப்பில்  மாணவி ஜெபிசா ஆகியோர் பேசினர். திருக்குறள் போட்டிகளில் கலந்துகொண்டு 1330  குறள்களையும் ஒப்பித்த குறளக மாணவிகள் ரித்திகா, நிஷ்மிதா, ஆஷிகா ஆகியோர் பாராட்டப்பட்டனர்.  
நிகழ்ச்சியில், வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையம் பத்மநாபன், கவிதை உறவு மருத்துவர் சிதம்பரநடராஜன், கவிமணி நற்பணி மன்ற புலவர் சிவதாணு, தெற்கு எழுத்தாளர் இயக்கம் திருத்தமிழ்த்தேவனார், தென்குமரித் தமிழ்ச் சங்கம் ராஜகோபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
 குறளக நிறுவனர் தமிழ்க்குழவி வரவேற்றார். ரத்தினசாமி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com