கருங்கல்லில் நீட் தேர்வு மையம்: மாற்றுத் திறனாளிகள் வலியுறுத்தல்

கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கான நீட் தேர்வு மையத்தை கருங்கலில் அமைக்க வேண்டும் என மாற்றுத் திறனாளிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கான நீட் தேர்வு மையத்தை கருங்கலில் அமைக்க வேண்டும் என மாற்றுத் திறனாளிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலச் செயலர் வில்சன், குமரி மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன், மாவட்டப் பொருளாளர் சார்லஸ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:
அகில இந்திய அளவில் மருத்துப் படிப்பில் சேர கடந்த ஆண்டு முதல் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கிராமப் புற மாணவர்களின் நலன்கருதி பள்ளி கல்வித் துறை மூலம் தமிழக அரசு  ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களிலும் பயிற்சி மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால்,இந்நாள் வரை கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நீர் தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்படவில்லை. அதேவேளையில், இந்தப் பயிற்சி மையம் மேல்புறம் ஒன்றியத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் கிள்ளியூர் ஒன்றியப் பகுதியிலுள்ள மாற்றுத் திறனாளிகள், கடலோர மாணவர்கள் உள்ளிட்டோர் ஏமாற்றமடைந்துள்ளனர்.
எனவே, மாற்றுத் திறன் மாணவர்கள் நலன் கருதி குமரி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலும் நீட் தேர்வு மையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிள்ளியூர் ஒன்றியத்துக்கான மையத்தை கருங்கல்லில் அமைக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com