கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

குமரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கன்னியாகுமரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்  துறையில் காலியாக உள்ள 48 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இத்தேர்வு பெண்கள், முன்னுரிமை பெற்றவர்கள், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் விகிதாச்சாரத்தை உள்ளடக்கியது. விண்ணப்பதாரர்களுக்கான குறைந்தபட்ச வயது 18. அதிகபட்ச வயது அருந்ததியர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வகுப்பினருக்கு 35. மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) 32. பொதுப் பிரிவினருக்கு 30.
இந்தப் பணிக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதியிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். கால்நடைகளைக் கையாள தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை  w‌w‌w.‌k​a‌n‌n‌i‌y​a‌k‌u‌m​a‌r‌i.‌t‌n.‌n‌i​c.‌i‌n என்ற இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், கன்னியாகுமரி, கால்நடை பராமரிப்புத் துறை, மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை நேரடியாகவும் பெற்றுக் கொள்ளலாம். நிறைவுசெய்யப்பட்ட விண்ணப்பங்களை சுயமுகவரியிட்ட அஞ்சல் உறையுடன், பிப்ரவரி 28 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் நேரடியாகவோ, அஞ்சல் மூலமோ, மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத் துறை, 3 ஆவது தளம்,  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,  கன்னியாகுமரி - 629 001 என்ற முகவரிக்கு கிடைக்கும்படி  அனுப்பி வைக்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com