சூழால் கிருஷ்ணசுவாமி கோயில் விழா இன்று தொடக்கம்

கொல்லங்கோடு அருகேயுள்ள சூழால், பிராகோடு ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயிலில் கும்ப ரோகிணி ஆறாட்டுத் திருவிழாவும், பஜனை பட்டாபிஷேக விழாவும் புதன்கிழமை (பிப். 14) தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.

கொல்லங்கோடு அருகேயுள்ள சூழால், பிராகோடு ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயிலில் கும்ப ரோகிணி ஆறாட்டுத் திருவிழாவும், பஜனை பட்டாபிஷேக விழாவும் புதன்கிழமை (பிப். 14) தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.
விழாவின் முதல் நாள் காலையில் கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள், காலை 9.10 மணிக்கு மேல் நேர்ச்சை பொங்காலை நடைபெறும். காலை 10.15 மணிக்கு மேல் கோயில் தந்திரி இரணியல் முருகேசன் தலைமையில் திருக்கொடியேற்றுதல் நடைபெறும். விழா நாள்களில் தினமும் காலையில் கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள், பிற்பகல் 1 மணிக்கு அன்னதானம், மாலையில் சிறப்புப் பூஜைகள், இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 2 ஆம் நாள் விழாவான வியாழக்கிழமை (பிப். 15) மாலை 5 மணிக்கு கொல்லங்கோடு ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலிலில் இருந்து பிராகோடு கோயிலுக்கு பண்பாட்டு ஊர்வலம் நடைபெறுகிறது.
இந்த ஊர்வலம் கொல்லங்கோடு கண்ணனாகம், கச்சேரிநடை, ஊரம்பு, சூழால் வழியாக கோயிலை வந்தடைகிறது. அன்றைய தினம் இரவு 10 மணிக்கு குழந்தை கண்ணனின் குறும்பு விளையாட்டுகளை சித்திரிக்கும் வகையிலான உறியடி நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிப். 16 முதல் பிப். 23 ஆம் தேதி வரை காலையில் ஸ்ரீமத் பாகவத ஸப்தாக யாகம் நடைபெறுகிறது. பிப். 23 ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஆறாட்டு ஊர்வலமும் அன்றைய தினம் இரவு 10.30 மணிக்கு மேல் திருக்கொடியிறக்குதலும் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com