வாகனச் சோதனையில் கெடுபிடி: காவல் துறைக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்

குமரி மாவட்டத்தில் வாகனச் சோதனை என்ற பெயரில் போலீஸார் கெடுபிடியில் ஈடுபடுவதாக காவல் துறைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

குமரி மாவட்டத்தில் வாகனச் சோதனை என்ற பெயரில் போலீஸார் கெடுபிடியில் ஈடுபடுவதாக காவல் துறைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த கட்சியின் குமரி மாவட்டச்  செயலாளர் ஆர்.செல்லசுவாமி வெளியிட்டுள்ளஅறிக்கை:
குமரி மாவட்டத்தில் அண்மைக்காலமாக பொதுமக்களுக்கு அச்சமூட்டும் வகையில் காவல் துறையினர் சாலையோரங்களில் நின்று இருசக்கர வாகனங்கள் மற்றும் பிற வாகனங்களை நிறுத்தி ஹெல்மெட் உள்ளிட்ட சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவல் துறையினர் திடீரென வாகனங்களை நிறுத்துவதால், வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துகள் ஏற்படுவதும், வாகன ஓட்டிகள் மீது பிரம்புகளை வீசுவதால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாவதும் தொடர்கிறது.
இவ்வாறு மாவட்டம் முழுவதும் காவல் துறையினரால் வாகன சோதனை என்ற பெயரில் ஏராளமான விபத்துகள் ஏற்படுகின்றன. மாவட்டத்தில் நடைபெறும் குற்றச் செயல்களை தடுத்து பொதுமக்களை காக்கவேண்டிய காவல் துறை, வாகன தணிக்கை என்ற பெயரில் பொதுமக்களை தாக்குவதும், விபத்துகளை ஏற்படுத்துவதும் கண்டிக்கத்தக்கது.
மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட்டு பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படாத வகையில், வாகன சோதனை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைத்து ஹெல்மெட் போடாதது உள்ளிட்ட விதிகளை மீறுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com