குழித்துறையில் பிப்.20இல் மக்கள் நீதிமன்ற முகாம்

குழித்துறையில் மக்கள் நீதிமன்ற (லோக் அதாலத்) முகாம் செவ்வாய்க்கிழமை (பிப். 20) நடைபெறுகிறது. 

குழித்துறையில் மக்கள் நீதிமன்ற (லோக் அதாலத்) முகாம் செவ்வாய்க்கிழமை (பிப். 20) நடைபெறுகிறது. 
இதுகுறித்து, நாகர்கோவில் பிஎஸ்என்எல் அலுவலக மக்கள் தொடர்பு அதிகாரி அலெக்சாண்டர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
பி.எஸ்.என்.எல்.  நிறுவனத்தில் தரைவழி இணைப்புகளைப் பெற்று கட்டண பாக்கி காரணமாக இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளவர்களுக்கு , விதிப்படியான தள்ளுபடியை பெற்றுக்கொண்டு, பாக்கியை தீர்வு செய்வதற்கும், தேவையானால் மறு இணைப்பு பெற்றுக்கொள்ளவும் மக்கள் நீதிமன்ற முகாம் (லோக் அதாலத்) குழித்துறை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (பிப். 20) காலை 10.30 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெற உள்ளது.
எனவே, அருமனை,  செருவலூர், கடையாலுமூடு, கொல்லங்கோடு, குலசேகரம், குழித்துறை, மணக்காவிளை,  மூவாற்றுகோணம், பைங்குளம், தேங்காய்ப்பட்டினம், பத்துகாணி, திருவட்டாறு, லோயர் கோதையார் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com