குளச்சல் பகுதியில் வீடுகளில் ஒட்டப்படும் கருப்பு நிற ஸ்டிக்கரால் பொதுமக்கள் பீதி

குமரி மாவட்டம், குளச்சல் பகுதியில் வீட்டுக் கதவுகளில் ஒட்டப்படும் கருப்பு நிற ஸ்டிக்கரால் பொதுமக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது.

குமரி மாவட்டம், குளச்சல் பகுதியில் வீட்டுக் கதவுகளில் ஒட்டப்படும் கருப்பு நிற ஸ்டிக்கரால் பொதுமக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கன்னியாகுமரி முதல் நீரோடி வரையுள்ள கடற்கரைக் கிராமங்களில் குறிப்பிட்ட சில வீடுகளில் கறுப்பு நிற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. கேரள மாநிலத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றதாகவும், கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வீடுகளில் உள்ள குழந்தைகளை கடத்தவே ஒரு கும்பல் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் தகவல் பரவியது.
மேலும் கேரளத்தில் ஊடுருவிய வட மாநில கொள்ளைக் கும்பல், கொள்ளை அடிக்க திட்டமிட்டு உள்ள வீடுகளை அடையாளம் காணவே இது போல கருப்பு நிற ஸ்டிக்கர்களை ஒட்டிச் செல்வதாகவும் கூறப்பட்டது. இதனால் குமரி மாவட்ட கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் மத்தியில் பீதியும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கன்னியாகுமரி பகுதியில் உள்ள ஒரு சில வீடுகளில் இதுபோன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. குளச்சல் காவல் சரகத்துக்குள்பட்ட வீடுகளிலும் கருப்பு நிற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. இதுகுறித்த தகவலின்பேரில் போலீஸார் சம்பந்தப்பட்ட பகுதிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே திங்கள்கிழமை காலை குளச்சலில் அழகனார் கோட்டவிளை, களிமாரில் உள்ள ரெஜினி என்பவர் வீட்டிலும் கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் குளச்சல் காவல் நிலைய ஆய்வாளர் முத்துராமன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com