குலசேகரம், குழித்துறை, தக்கலையில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டு ஊர்வலத்தில் அக்கட்சியினரைத் தாக்கிய ஏஎஸ்பி மற்றும் போலீஸாரைக் கண்டித்து குலசேகரம், குழித்துறை,

தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டு ஊர்வலத்தில் அக்கட்சியினரைத் தாக்கிய ஏஎஸ்பி மற்றும் போலீஸாரைக் கண்டித்து குலசேகரம், குழித்துறை, தக்கலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குலசேகரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வட்டாரக் குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமை வகித்தார். இதில் வட்டாரச் செயலர் விஸ்வம்பரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின்தாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் நடராஜன், ரெஜீஸ் குமார், ஸ்ரீகுமார், ஜெயராஜ், பால்தங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
களியக்காவிளை: குழித்துறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மார்த்தாண்டம் வட்டாரக் குழு உறுப்பினர் சர்தார்ஷா தலைமை வகித்தார். வட்டாரச் செயலர் வீ. அனந்தசேகர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார். இதில் வட்டாரக் குழு உறுப்பினர்கள் மோகன்குமார், குமாரசுவாமி, இ. பத்மநாபபிள்ளை, அலிகான், ஷேக் முகமது, பிரான்சிஸ், மதன்மோகன் குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்சிறை வட்டாரம் சார்பில் புதுக்கடையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வட்டாரச் செயலர் சிதம்பர கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் தங்கமணி போராட்டத்தை முடித்து வைத்தார். இதில் வட்டாரக் குழு உறுப்பினர்கள் அலக்ஸ், வல்சலம், சிவகுமார், விக்டர், ஜெயா, சந்தோஷ்குமார், எஸ்கலின், விஜயா, ஜாண்ரூபி, மேரிதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தக்கலை: தக்கலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் ஜே.சைமன்சைலஸ் தலைமை வகித்தார். வட்டாரகுழு உறுப்பினர் தோ.சின்னதம்பி ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசினார். இதில் மாவட்ட குழு உறுப்பினர் தோ. சந்திரகலா, முரளீதரன், சின்னநாடார், காளிபிரசாத், ஜீவானந்தம், லெனின்பாபுஆகியோர் பேசினர். வட்டாரச் செயலர் சுஜாஜாஸ்மின் நிறைவுரையாற்றினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com