ஆசிரியர்கள் குறைகளை களைய தனியாக கூட்டு அமர்வு நடத்த வலியுறுத்தல்
By DIN | Published on : 13th January 2018 12:57 AM | அ+அ அ- |
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் குறைகளை களைய ஒவ்வொரு கல்வி மாவட்டங்களிலும் தனித்தனி தேதிகளில் கூட்டு அமர்வு நடத்த வேண்டும் என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக குமரி மாவட்டத் தலைவர் இளங்கோ, மாவட்டச் செயலர் வினித், பொருளாளர் ஜெயகுமார் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலரிடம் அளித்துள்ள மனுவில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் குறைகளை களைய ஒவ்வொரு கல்வி மாவட்டங்களிலும் தனித்தனி தேதிகளில் கூட்டு அமர்வு நடத்த வேண்டும்.
மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்வு எழுதும் பள்ளிகளில் செய்முறை தேர்விற்கு ஒரு பாடத்திற்கு இரண்டு ஆசிரியர்களை தேர்வர்களாக நியமிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.