மரபணு சோதனையில் அடையாளம் காணப்பட்ட மீனவர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

ஒக்கி புயலில் சிக்கி உயிரிழந்து, மரபணு சோதனையில் அடையாளம் காணப்பட்ட சின்னத்துறை மீனவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, வியாழக்கிழமை இரவு அடக்கம் செய்யப்பட்டது.

ஒக்கி புயலில் சிக்கி உயிரிழந்து, மரபணு சோதனையில் அடையாளம் காணப்பட்ட சின்னத்துறை மீனவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, வியாழக்கிழமை இரவு அடக்கம் செய்யப்பட்டது.
ஒக்கி புயலில் சிக்கி, கடலில் மீன்பிடிக்கச் சென்ற ஏராளமான மீனவர்கள் மாயமாகினர். இதில் பெரும்பாலான மீனவர்கள் மீட்கப்பட்ட நிலையில், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 150 -க்கும் மேற்பட்ட மீனவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை.
இந்த நிலையில் கேரள கடல் பகுதியில் கண்டெடுக்கப்பட்டு, அம் மாநில அரசு மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ள சடலங்கள் அழுகிய நிலையில் உள்ளதால், உறவினர்களால் அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மரபணு சோதனை மூலம் சடலங்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. இந்த வகையில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்களின் சடலங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ன.
இந்த நிலையில் கேரள மாநிலம் எர்ணாகுளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்த சடலம், மரபணு சோதனையில் குமரி மாவட்டம் சின்னத்துறையைச் சேர்ந்த பர்ணபாஸ் மகன் றாபின் என புதன்கிழமை அடையாளம் காணப்பட்டு. இதையடுத்து அவரது உறவினர்களிடம் வியாழக்கிழமை சடலம் ஒப்படைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை இரவு றோபின் சடலம் சின்னத்துறை கொண்டுவரப்பட்டு, அங்குள்ள தேவாலயத்தில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இவருடன் சேர்த்து இதுவரை குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 15 மீனவர்களின் சடலம் மரபணு சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com