ரோஜாவனம் கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டம்

நாகர்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரியில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

நாகர்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரியில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
கல்லூரி  திட்டக்குழு மேலாளர் சில்வெஸ்டர் தலைமை வகித்தார்.  நிர்வாக அலுவலர்  நடராஜன் முன்னிலை வகித்தார்.    பேராசிரியர் அய்யப்பன்  வரவேற்றார்.  , கல்லூரி  மாணவர்கள்   தமிழர்  திருநாளை பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.  
 நிகழ்ச்சியில் ரோஜாவனம் கல்லூரி  பேராசிரியர்கள் அருமைநாயகம், துரைராஜ்,  மகிமிதா, ரெங்கசாமி, ரோஜாவனம் மேலாளர் கோபி,  கல்லூரி கணக்குஅதிகாரி ராஜேஸ் மோகன்,நூலகர் கிளாட்சன், கல்லூரி வார்டன்  கோலப்பபிள்ளை மற்றும் மாணவர்கள் உள்ளிட்டபலர் கலந்துகொண்டனர்.  ஒருங்கிணைப்பாளர் விமலநாதன் நன்றி கூறினார். 
ஆரல்வாய்மொழி:  ஆரல்வாய்மொழியில் எம்.இ.டி பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் மணிகண்டன் வரவேற்றார்.   கல்லூரி நிறுவனர்- தலைவர் முகமது எக்கிம் தலைமை வகித்து,  குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியினை தொடங்கிவைத்தார்.  நிர்வாக இயக்குநர் லைலா எக்கிம்,  துணைத் தலைவர்கள் அல்சு கேல் , அல் சமீம்,  இயக்குநர் பக்குரிதின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து மாணவ,மாணவியரும், ஆசிரியர்களும் இணந்து பொங்கலிட்டனர். தொடர்ந்து மாணவ, மாணவியரிடையே விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. 
  இந்நிகழ்ச்சியில் கல்லூரி கல்வி இயக்குநர் சரத்சந்திரராஜ், நிர்வாக அலுவலர் பசுரூதின் மற்றும் ஆசிரியர்கள் மாணவர், மாணவிகள் கலந்து கொண்டனர். 
களியக்காவிளை:விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பொங்கல் விழாகொண்டாடப்பட்டது.  வட்டாட்சியர் கண்ணன் தலைமை வகித்து, குத்துவிளக்கு ஏற்றினார். தொடர்ந்து சமத்துவ பொங்கலிடப்பட்டது.
நிகழ்ச்சியில் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் எட்வர்ட் ராஜசேகர் மற்றும் அலுவலகப் பணியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
குலசேகரம்: மஞ்சாலுமூடு அருணோதயா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற  பொங்கல் விழாவுக்கு   தாளாளர் சதானந்த் தலைமை வகித்தார். முதல்வர் லீனா சதானந்த்  நிகழ்ச்சியைதொடங்கிவைத்தார். இதில் மாணவ, மாணவியருக்கு கோலப்போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து மாணவ, மாணவியர்  இணைந்து பொங்கலிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com