ஒக்கி புயலால் பாதிப்பு: விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும்

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர் மேதா பட்கர் வலியுறுத்தினார்.

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர் மேதா பட்கர் வலியுறுத்தினார்.
குமரி மாவட்டத்தின் நீரோடி மற்றும் சின்னத்துறை மீனவ கிராமங்களுக்கு சனிக்கிழமை நேரில் சென்ற அவர், பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் நீரோடியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்துக்கு தமிழக முதல்வர், பிரதமர், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் உள்ளிட்டோர் வந்திருந்தாலும், மத்திய, மாநில அரசு இயந்திரங்கள் சரியாகச் செயல்படவில்லை. கடலில் உயிருக்குப் போராடிய மீனவர்களை காப்பாற்ற இவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?
சுனாமி நேரத்தில் அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கையில் சிறு அளவுகூட ஒக்கி புயல் நேரத்தில் தற்போதைய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு வழங்கும் நிவாரணம் மிகக் குறைந்த அளவே உள்ளது. இதனால் விவசாயிகள் பலர் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என்றார் அவர்.
அப்போது பச்சை தமிழகம் கட்சித் தலைவர் சுப. உதயகுமாரன், சமூக ஆர்வலர் போஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com