குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் சாலை விபத்துகளில் 285 பேர் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் சாலைவிபத்துகளால் 285 பேர் உயிரிழந்துள்ளனர் என்றார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் சாலைவிபத்துகளால் 285 பேர் உயிரிழந்துள்ளனர் என்றார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்.
நாகர்கோவில் போக்குவரத்து காவல் பிரிவின் சார்பில் சாலை விழிப்புணர்வு வாரவிழா மீனாட்சிபுரம் அண்ணா பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. நாகர்கோவில் துணை காவல் கண்காணிப்பாளர் கோபி தலைமை வகித்தார். போக்குவரத்து பிரிவு ஆய்வாளர் அருள் ஜான் ஒய்சிலின்ராஜ் முன்னிலை வகித்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாத் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கையேட்டினை வாகன ஓட்டிகளுக்கு வழங்கினார். பின்னர் அவர் பேசியது: இரு சக்கர வாகனம் ஓட்டும்போதும் செல்லிடப்பேசி பேசுவதை தவிர்க்க வேண்டும். சாலை விதிகளை பின்பற்ற வேண்டும். உங்களை நம்பி குடும்பத்தில் நிறையபேர் இருப்பார்கள். எனவே நீங்கள் பாதுகாப்பாக வீடுகளுக்கு செல்ல வேண்டும். கடந்த 2017 ஆம் ஆண்டு மட்டும் குமரி மாவட்டத்தில் சாலை விபத்துக்கள் மூலம் 285 பேர் உயிரிழந்துள்ளனர் . மேலும் பல்வேறு விபத்துக்களில் 900 பேர் பலத்த காயம் அடைந்து உடல் ஊனமடைந்துள்ளனர்.
ஒரு ஆண்டில் மட்டும் குமரி மாவட்டத்தில் ஆயிரத்து 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களது குடும்பத்தினர் துயரம் அடைந்துள்ளனர். உங்கள் உயிரை பாதுகாக்கவும், உறவினர்கள் துன்பப்படாமல் இருக்கவும் பாதுகாப்பாக பயணிப்பது அவசியம். இம் மாவட்டத்தில் சாலை விழிப்புணர்வு அதிகமாக இருக்கிறது. எனவே சாலை விதிகளை பின்பற்றினால் சிறப்பாக இருக்கும். பழைய குற்ற வழக்குகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், ஹெல்மெட் அணியாமல் செல்லிடப்பேசி பேசியபடி வரும் இளைஞர் விபத்தில் சிக்கி காயமடைவது போலவும், அவரை அருகிலிருப்பவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் காட்சியும் நடித்துக் காட்டப்பட்டது. இதில் நாட்டுப்புற கலைஞர் பழனியாபிள்ளை தலைமையில் போக்குவரத்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மனோன்மணி குழுவினர் நாகஸ்வர இசை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com