புலியூர்குறிச்சியில் அனைத்துக் கட்சி கூட்டம்

தக்கலை அருகே புலியூர்குறிச்சியில் அனைத்துக் கட்சி கூட்டம் பத்மநாபபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் மனோதங்கராஜ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

தக்கலை அருகே புலியூர்குறிச்சியில் அனைத்துக் கட்சி கூட்டம் பத்மநாபபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் மனோதங்கராஜ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், குமரி மாவட்ட மக்களின் நியாயமான உணர்வுகளையும், பாதிப்புகளையும் தெளிவாக விவாதிக்க சட்டப்பேரவையில் போதிய நேரம் ஒதுக்கி விவாதிக்காதது வேதனையளிக்கிறது. விவசாய மற்றும் மீனவ பிரதிநிதிகள் புதுதில்லி சென்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசுவது. குறிப்பிட்ட சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நீதிமன்ற உதவியை நாடுவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.
தொடர் சத்தியாகிரக போராட்டம் நிறைவு : புலியூர்குறிச்சியில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க கூட்டமைப்பு சார்பில் எம்.எல்.ஏ. மனோதங்கராஜ் தலைமையில் நடைபெற்று வந்த தொடர் சத்தியாகிரக போராட்டம் 12 ஆவது நாளான சனிக்கிழமை நிறைவுற்றது.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜேஷ்குமார், (கிள்ளியூர்) ஜே.ஜி. பிரின்ஸ் (குளச்சல்) மனோதங்கராஜ் (பத்மநாபபுரம்) ஆகியோர் ஒக்கி புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளையும் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் பாதிப்புகளை எடுத்து கூறி அவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க புதுதில்லி தேசிய பேரிடர் ஆணையத்திடம் முறையிட்டு வரைமுறைகளை திருத்தம் செய்ய வலியுறுத்துவது. இதனைத் தொடர்ந்து தொடர் சத்தியாகிரக போராட்டத்தை சனிக்கிழமையோடு நிறைவு செய்வோம் என்றனர். பாசனசபை கூட்டமைப்புத் தலைவர் புலவர் செல்லப்பா நிறைவுரையாற்றினார்.
இதில், கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார், மாவட்ட பாசனத்தார் தலைவர் வின்ஸ் ஆன்றோ, பாசனசபை கூட்டமைப்புத் தலைவர் புலவர் செல்லப்பா, விவசாய சங்க நிர்வாகிகள் ஹென்றி, ஜோன்ஸ், செண்பகசேகரபிள்ளை, பூமிபாதுகாப்பு சங்கத் தலைவர் பத்மதாஸ், தேமுதிக மாவட்டச் செயலர் ஜெகநாதன், மதிமுக வெற்றிவேல், மதசார்பற்ற ஜனதாதளம்அருள்ராஜ், மாத்தூர் ஜெயன் ( வி.சி.க.) ரவி (சிபிஎம்) ராஜ் (சிபிஐ) அந்தோணிமுத்து (சிபிஐஎம்எல்) தங்கப்பன் (சமக) கருங்கல் ஜார்ஜ் (வியாபாரிகள் சங்கம்) உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com