மறைசாட்சி தேவசகாயம்பிள்ளை வீரமரண பெருவிழா கொடியேற்றம்

புலியூர்குறிச்சி மறைசாட்சி தேவசகாயம்பிள்ளை வீரமரண பெருவிழா மற்றும் டச்சு தளபதி டிலனாய் குடும்ப கல்லறை அர்ச்சிப்பு விழா வெள்ளிக்கிழமை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது.

புலியூர்குறிச்சி மறைசாட்சி தேவசகாயம்பிள்ளை வீரமரண பெருவிழா மற்றும் டச்சு தளபதி டிலனாய் குடும்ப கல்லறை அர்ச்சிப்பு விழா வெள்ளிக்கிழமை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, , திருக்கொடியை முளகுமூடு பங்கு பணியாளர் டோமினிக் கடாட்சதாஸ் தலைமையில் முளகுமூடு, விலவூர் மக்களும், இதற்கான பூமாலையை அருள்பணியாளர் ஐசக் தலைமையில் மைலகோடு மக்களும், அப்பட்டுவிளை புனித சூசையப்பர் ஆலய பங்கு பணியாளர் அருள்பணி மைக்கேல் அலோசியஸ் தலைமையில் அப்பகுதி இறைமக்கள் புனிதரின் புகழ்பாடியவாறு வந்தனர். இவர்களை மறைசாட்சியின் பங்கு மக்கள் வரவேற்றனர்.
தொடர்ந்து குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் வி. மரிய அல்போன்ஸ் தலைமையில் திருக்கொடியேற்றம் மற்றும் திருப்பலி நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருத்தல அதிபர் அருள்பணி ஹிலாரி மற்றும் அருள் பணியாளர்கள் மரியதாஸ், மரியதாசன், மரியசெல்வராஜ், நாஞ்சில் பால் பதனிடும் நிலையமேலாண்மை இயக்குநர் ஜெரால்டு ஜஸ்டின், பங்கு பேரவை துணைதலைவர் ஆல்பர்ட் ஜெஸ்டின், செயலர் ஜெனி, துணைச் செயலர் கிறிஸ்டி, பொருளாளர் பாபு மற்றும் நிர்வாகிகள், இறைமக்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
பொங்கல் விழா:ஆலயவளாகத்தில் ஞாயிற்றுகிழமை (ஜன.14) காலை 6 மணிக்கு பொங்கல்விழா நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு ஆடம்பர கூட்டு திருப்பலி நாஞ்சில்பால் பதனிடும் நிலைய மேலாண்மை இயக்குநர் ஜெரால்டு ஜஸ்டின் தலைமையில் நடை பெறுகிறது. திருப்பலியில் குழந்தைகளுக்கு முதல் நற்கருணை விருந்து வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து உதயகிரி கோட்டையில் மறைந்த தட்டு தளபதி டிலனாய் குடும்ப கல்லறைக்கு அர்ச்சிப்பு நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com