மரியா பொறியியல் கல்லூரியில் முப்பெரும் விழா நாளை தொடக்கம்

ஆற்றூர் மரியா பொறியியல் கல்லூரியில் கலைப்போட்டிகள், இசை மற்றும் நகைச்சுவை விருந்து, கல்லூரி ஆண்டு விழா  என  முப்பெரும்

ஆற்றூர் மரியா பொறியியல் கல்லூரியில் கலைப்போட்டிகள், இசை மற்றும் நகைச்சுவை விருந்து, கல்லூரி ஆண்டு விழா  என  முப்பெரும் விழா வியாழக்கிழமை  (மார்ச் 15) தொடங்குகிறது. 
இதையொட்டி, கல்லூரியில் காலையில் "ஸ்பார்க்-18' என்ற கலைவிழாவும், பிற்பகலில் மெகா இசை மற்றும் நகைச்சுவை விருந்தும் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கு மரியா கல்விக்குழுமங்களின் தலைவர்   ஜி. ரசல் ராஜ் தலைமை வகிக்கிறார். துணைத் தலைவர்    பி.ஷைனி தெரசா முன்னிலை வக்கிக்கிறார். கல்லூரி முதல்வர் ஒய்.சுஜர் சிறப்புரையாற்றுகிறார்.  தொடர்ந்து வெள்ளிக்கிழமை (மார்ச் 16)  கல்லூரி  ஆண்டு விழா நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில்  மரியா கல்விக் குழுமங்களின் தலைவர்  ஜி. ரசல் ராஜ், துணைத் தலைவர்  பி. ஷைனி தெரசா ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைக்கின்றனர். குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  என். ஸ்ரீநாத் மற்றும் அண்ணா பல்கலைக் கழக  மாணவர் சேர்க்கைத் துறைச் செயலர்  பேராசிரியர்  ரைமண்ட் உத்தரியராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர். கல்லூரி முதல்வர் ஒய்.சுஜர் ஆண்டறிக்கை சமர்ப்பித்துப் பேசுகிறார். விழா ஏற்பாடுகளை விழா ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் புரூசிலி தலைமையில் விழாக்குழுவின் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com