முதல்வர் விருது பெற்ற குறளக மாணவிகளுக்கு பாராட்டு

திருக்குறளின் 1,330 குறள்பாக்களையும் மனனம் செய்து ஒப்பித்து தமிழக முதல்வரின் விருது பெற்ற குறளக மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நாகர்கோவிலில் நடைபெற்றது. 

திருக்குறளின் 1,330 குறள்பாக்களையும் மனனம் செய்து ஒப்பித்து தமிழக முதல்வரின் விருது பெற்ற குறளக மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நாகர்கோவிலில் நடைபெற்றது. 
நாகர்கோவில் குறளகத்தில் பயின்று 1,330 குறள்பாக்களையும் மனனம் செய்து ஒப்பித்த மாணவர்கள் மேதா, பிரதிஷா, ஸ்ரீராம், கௌதம் ஆகிய 4 பேரும் தமிழ் வளர்ச்சித் துறையால் தேர்வு  செய்யப்பட்டு, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியால் பாராட்டப்பட்டு, அவர்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. 
இம்மாணவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு  அண்ணா கல்லூரி முன்னாள் முதல்வர் பத்மநாபன் தலைமை வகித்தார். முனைவர் ஆபத்துகாத்தபிள்ளை, டாக்டர் பத்மநாபன், ராஜகோகிலா அறக்கட்டளைத் தலைவர் ராஜகோபால்,  வழக்குரைஞர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டிப் பேசினர். வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா திருக்குறளில் மெய்யுணர்தல் குறித்து சிறப்புரையாற்றினார். 
பன்னாட்டு தமிழுறவு மன்றம் தியாகி முத்துகருப்பன், செந்தமிழ் அருள்நெறிப்பேரவை புலவர் ராமசாமி,  மாவட்டத் திருக்குறள் பேரவை குமரிச்செல்வன்,  முனைவர் ராமையா, பேராசிரியர்கள் ஆனந்த், மலர், உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர். 
குறளகம் நிறுவனர் தமிழ்க்குழவி வரவேற்றார். முன்னாள் முதன்மைக் கல்வி அலுவலர் ரத்தினசாமி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com