பள்ளி மாணவர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டுதல் முகாம்

கன்னியாகுமரி மாவட்ட  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கான வாழ்க்கை வழிகாட்டுதல் முகாம் நாகர்கோவிலில் புதன்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்ட  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கான வாழ்க்கை வழிகாட்டுதல் முகாம் நாகர்கோவிலில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்-சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகியவை இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்- சிறுபான்மையினர் நல அலுவலர் செ.பவானி ஜீஜா  தலைமை வகித்தார்.
 இந்திய அளவிலான ஆட்சியியல் தேர்வு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள், ஆசிரியர்  தகுதித் தேர்வு ஆகிய போட்டித் தேர்வுகள், அவற்றில் பங்கேற்று தேர்ச்சி பெறுவது,  வங்கி தேர்வுகள், வங்கிக் கடன் பெற்று கல்வி பயிலுதல் மற்றும் தொழில்கடன் ஆகியவை குறித்து விளக்கப்பட்டது.
மேலும், சுயதொழில்,  அரசுத் திட்டங்கள்,  ராணுவம், கடற்படை, விமானப் படைகளில் வேலைவாய்ப்பு ஆகியவை குறித்து மாணவர், மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இதுதவிர, வேலைவாய்ப்பற்றோருக்கான அரசு நிதியுதவி, மாதந்தோறும் மற்றும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் வேலைவாய்ப்பு முகாம், வாழ்க்கை தொழில் குறித்த விழிப்புணர்வு, உயர்கல்வி, அதற்கான தகுதிகள் மற்றும் தேர்வுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில்,  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மூ.காளிமுத்து, மாவட்ட தொழில்மைய உதவி இயக்குநர் பெர்பெட், முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநர் என்.ராஜேந்திரன், முன்னோடி வங்கி மேலாளர் விஸ்வநாதன், மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் எஸ்.சையது முகம்மது, விவேகானந்தா  கல்லூரி முதல்வர் என்.நீலமோகன், விவேகானந்தா கல்லூரி உதவிப் பேராசிரியர்கள்  எஸ்.ராஜபிரபா,  எம்.சரவணன் மற்றும் பிற்படுத்தப்பட்டோர்- சிறுபான்மையினர் விடுதி  மாணவர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com