சுங்கான்கடை வின்ஸ் சிபிஎஸ்இ பள்ளியில் புத்தகக் கண்காட்சி

சுங்கான்கடையில் அமைந்துள்ள வின்ஸ் சிபிஎஸ்இ பள்ளியில் புத்தகக் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

சுங்கான்கடையில் அமைந்துள்ள வின்ஸ் சிபிஎஸ்இ பள்ளியில் புத்தகக் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.
வின்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவரும் முன்னாள் எம்.பி-யுமான நாஞ்சில் வின்சென்ட் புத்தகக் கண்காட்சியை தொடங்கிவைத்தார்.  செயலர் கிளாரிசா வின்சென்ட்   முதல் விற்பனையை தொடங்கிவைத்தார். புத்தக திருவிழாவில்  குழந்தைகளுக்கான மேஜிக்,  வண்ணம் தீட்டுதல், செயல் திறன் பயிற்சிகள்,  உலகம் தழுவிய   இலக்கியங்கள், கதை புத்தகங்கள்,  விஞ்ஞானம், கண்டு பிடிப்புகள்,  பட  அகராதிகள்,   வரலாற்று செய்திகள்,  தொழில்நுட்ப விளக்கங்கள்,  உடல்  ஆரோக்கிய   குறிப்பேடுகள்,  விநாடி வினா, கைவினை   பொருள்கள்  உருவாக்கும்  முறை குறித்த விளக்கங்கள் அரசியல் சார்ந்த பதிவுகள், பொதுஅறிவு , ஆன்மிகம், தமிழ் , மலையாளம்,  ஹிந்தி  உள்ளிட்ட மொழிகளில்  ஐந்தாயிரத்துக்கும்  மேற்பட்ட புத்தகங்கள் மாணவர்களுக்காக வைக்கப்பட்டிருந்தன. 
கண்காட்சியில் டிவிடிக்கள், குறுந்தகடுகளும் இடம் பெற்றிருந்தன. கண்காட்சியை மாணவ- மாணவியர், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பார்வையிட்டு,  பங்கேற்று புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.  
மாணவர்களிடையே  புத்தகங்களை  வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கவும்,  ஊக்கப்படுத்தவும், பயனளிக்கும் வகையில்  இந்த புத்தக திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  ஏற்பாடுகளை பள்ளி துணை முதல்வர் டெல்பின்,  சுதர்சன் புத்தக உரிமையாளர்  மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com