சாத்தான்குளம் ஹென்றி, மாரியம்மன் பள்ளிகள் 100% தேர்ச்சி

எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மாரியம்மன் இந்து மேல்நிலைப் பள்ளி ஆகியன 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மாரியம்மன் இந்து மேல்நிலைப் பள்ளி ஆகியன 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 55 பேரும் தேர்ச்சி பெற்றனர். பள்ளி அளவில் முறையே 488, 486, 485 என மதிப்பெண்கள் பெற்று மாணவர், மாணவிகள் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். கணிதத்தில் ஒருவரும், சமூக அறிவியலில் 3 பேரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் மற்றும் முதல்வர் நோபுள்ராஜ், துணை முதல்வர் சந்தனக்குமார், தலைமையாசிரியர் பங்கராஸ், பள்ளி நிர்வாக அதிகாரி சாந்தி உள்ளிட்டோர் பாராட்டினர். சாத்தான்குளம் தூய இருதய மேல்நிலைப் பள்ளி 94 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. பள்ளி அளவில் முறையே 489, 463, 424 மதிப்பெண்கள் பெற்று மாணவர், மாணவிகள் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி நிர்வாகி ரெமிஜியூஸ் லியோன் அடிகளார், தலைமை ஆசிரியர் தேவராஜ் உள்ளிட்டோர் பாராட்டினர்.
ஸ்ரீ மாரியம்மன் இந்து மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. தேர்ச்சி பெற்ற மாணவர், மாணவிகளை பள்ளிச் செயலர் செந்திவேல், தலைமை ஆசிரியை மல்லிகா உள்ளிட்டோர் பாராட்டினர். சாலைபுதூர் ஏக ரட்சகர் சபை மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 227 பேரில் 226 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 99.5 சதவீத தேர்ச்சி ஆகும். தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர், தலைமை ஆசிரியர் சுந்தரராஜ் உள்ளிட்டோர் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com